நெய்வேலியிலும் அர்ச்சகர்களின் பூணூல் அறுப்பு
நெய்வேலி:தஞ்சை, திருவாரூரைத் தொடர்ந்து நெய்வேலியிலும் அர்ச்சகர்களின் பூணூல் அறுக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது.
தஞ்சையிலும், திருவாரூரிலும் அர்ச்சகர்களின் பூணூல் அறுக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இந்த சம்பவங்கள் தொடர்பாக தி.க.வைச் சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் நெய்வேலியிலும் பூணூல் அறுப்பு நிகழ்ச்சி நடந்துள்ளது. நெய்வேலியில் வில்லுடையான்பட்டு முருகன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் நேற்று பிற்பகல் 1 மணியளவில் ஒரு கும்பல் புகுந்தது.
அங்கிருந்த பூசாரி குருமூர்த்தியை சரமாரியாக அடித்த அக்கும்பல் அவர் அணிந்திருந்த பூணூலை அறுத்து எரிந்தனர். பின்னர் அவரது தலை குடுமியையும் கத்தரித்து எறிந்தனர்.
போகும்போது குருமூர்த்தி அணிந்திருந்த தங்கச் சங்கிலியையும் பறித்துக் கொண்டு தப்பினர். கோவிலில் இருந்த விநாயகர் சிலையும் உடைத்து சேதப்படுத்தப்பட்டது.
அதன் பின்னர் குருமூர்த்தியின் மகன் ஞானஸ்கந்தன் வீட்டுக்குச் சென்று ஞானஸ்கந்தன், அவரது மகன் கோபிநாத், அண்ணன் மகன் கணேசன் ஆகியோரது பூணூல்களையும் அறுத்து எரிந்தனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக விரைந்து வந்த போலீஸார் விசாரணை நடத்தி தி.கவைச் சேர்ந்த 10 பேரை வலை வீசி தேடி வருகிறார்கள்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications