தாழ்த்தப்பட்டவர் பிரதமராக வேண்டும்-ராமதாஸ்
சென்னை:அம்பேத்காரின் வாழ்க்கை வரலாற்றை அனைத்து வகுப்புகளிலும் பாடமாக வைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னையில் அகில இந்திய எஸ்சி, எஸ்டி ரயில்வே தொழிற்சங்கம் சார்பில் அம்பேத்காரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் ராமதாஸ் கலந்து கொண்டு பேசியதாவது,
இந்தியாவில் டாக்டர் அம்பேத்கார் பிறக்காமல் இருந்திருந்தால் தாழ்த்தப்பட்டவர்கள் வாழ்ந்திருக்க முடியாது. இன்று பலருடைய உள்ளத்திலே தீண்டாமை உணர்வு இருக்கிறது. இந்த உணர்வு ஒழிந்தால் தான் அறிவார்ந்த சமுதாயத்தை பார்க்க முடியும்.
ஒடுக்கப்பட்டவர்கள் கல்வியறிவு பெறக்கூடாது என்பதற்காக கல்வியை வியாபார பொருளாக மாற்றி விட்டனர். அரசு வழங்கும் கல்வியிலும் தரம் இல்லை.
தாழ்த்தப்பட்டவர்களுக்காக ஒவ்வொரு மாநிலத்திலும் உறைவிடப் பள்ளிகள் தொடங்க வேண்டும். அங்கு அவர்களுக்கு சிறந்த கல்வியை கொடுக்க வேண்டும்.
உயர்கல்வி நிறுவனங்களில் தீண்டாமை பல வடிவங்களில் புகுந்துள்ளது. தாழ்த்தப்பட்டவர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான ஒதுக்கீடு அவர்களுக்கு கிடைப்பதில்லை. இன்னும் நாம் போராட வேண்டியது ஏராளம் உள்ளது. நமது போராட்ட குணம் மங்கி விடக்கூடாது. மனுதர்மம் எந்த ரூபத்தில் வந்தாலும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.
அம்பேத்காரின் வாழ்க்கை வரலாற்றை அனைத்து வகுப்புகளிலும் பாடமாக வைக்க வேண்டும். குடியரசு தலைவராக தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த கே.ஆர் நாராயணன் வந்தார்.
அதேபோல பிரமதராக தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்தவர் வர வேண்டும். அப்படிப்பட்ட நண்பர் என் கண் எதிரில் தெரிகிறார். அவர் தான் ராம்விலாஸ் பஸ்வான். அவர் பிரதமராகும் காலம் விரைவில் வரும் என அவர் கூறினார்.
பாலாறு: பாமக தொடர் போராட்டம்:
முன்னதாக ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில்,
ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே புதிய அணை கட்ட தீவிர முயற்சி எடுத்து வருகிறது. அப்படி அணை கட்டினால் வேலூர், திருவண்ணாமலை, காஞ்சீபுரம், திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். மேலும் நீர்பாசனம் இன்றி இம்மாவட்டத்தில் விவசாயம் பாதிக்கப்படும். இதனால் தமிழகத்திற்குள்ளேயே விவசாயிகள் அகதிகளாக மாறும் நிலை உருவாகும்.
எனவே ஆந்திர அரசு சகோதர உணர்வுடன் பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவதை கைவிட வேண்டும். மத்திய அரசு இதில் உடணடியாக தலையிட்டு அணை கட்டுவதை தடுக்க வேண்டும்.
தமிழக மக்களின் வாழ்வுரிமையை காத்திட பாமக சார்பில் வரும் ஏப்ரல் 27ம் தேதி முதல் மே 1ம் தேதி வரை தமிழக எல்லையான வேலூர் மாவட்டம் பில்லூர் அருகே பாலாற்றில் தொடர் போராட்டம் நடத்தப்படும்.
ஏப்ரல் 27ம் தேதி பாமக தலைவர் ஜி.கே. மணி தலைமையிலும், 28ம் தேதி முன்னாள் மத்திய தொடர்வண்டித் துறை இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி தலைமயிலும், 29ம் தேதி முன்னாள் பெட்ரோலியத்துறை இணையமைச்சர் பொன்னுசாமி தலைமையிலும், 30ம் தேதி தன்ராஜ் எம்பி தலைமையிலும், 1ம் தேதி என் தலைமையிலும் போராட்டம் நடைபெறும்.
இதில் ஏராளமான பாமகவினர் கலந்து கொள்வார்கள். மேலும் விவசாய சங்கத்தினர் மற்றும் பொதுமக்களும் கலந்து கொள்வார்கள் என அவர் கூறியுள்ளார்.
-
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..டபுள் ஆன ஊதியம்! அதிரடியாக வெளியான ஆர்டர்! யார் யாருக்கு? எவ்வளவு? -
Spot the difference: இந்த இரு படங்களுக்கிடையே 3 வித்தியாசங்களை கண்டுபிடியுங்கள்! சவாலுக்கு ரெடியா? -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. 0.9 கி.மீ உயரத்தில் நடந்த வானிலை மாற்றம்! சம்பவம் இருக்கு -
Toll Charge: தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி! -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
இன்று முதல் புதிய வருமான வரி விதிகள் அமல்! சம்பளதாரர்கள் கவனிக்க வேண்டிய 'டாப் 10' மாற்றங்கள்! -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல்












Click it and Unblock the Notifications