இந்த ஆண்டு 27% இட ஒதுக்கீடு இல்லை
டெல்லிஐஐடி, ஐஐஎம் போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும் இந்த ஆண்டு இந்த கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை அமலாக்கவும் தடை விதித்துவிட்டது.
ஐஐடி மற்றும் ஐஐஎம் போன்ற மத்திய அரசின் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, இந்த இடஒதுக்கீட்டை செயல்படுத்த இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
இந்தத் தடையை நீக்க கோரி மத்திய அரசு கடந்த 18ம் தேதி உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது. உச்சநீதிமன்றம் இந்த வழக்கு விசாரணையை 23ம் தேதி ஒத்தி வைத்தது.
அதன்படி இன்று உச்சநீதிமன்றத்தில நீதிபதி அரிஜித் பசாயத், கோகேஷ்வர் சிங் பாந்தா ஆகியோர் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு வந்தது.
அப்போது, நாங்கள் விதித்த தடையை மறு பரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் இருப்பதாக தெரியவில்லை. இந்த ஆண்டு இட ஒதுக்கீட்டை அமல்படுத்தவும் தடை விதிக்கிறாம் என்றனர்.
இந்த வழக்கில் தீர்ப்பு வரும் வரை உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையை தள்ளி வைக்க மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் அர்ஜூன் சிங் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால், இன்றைய விசாரணை வரை காத்திருக்கப் போதாகவும், அதன் பிறகும் பொறுமையாக இருக்க முடியாது எனவும், மாணவர் சேர்க்கை தொடர்பாக தன்னிச்சையாக முடிவு எடுக்க நேரிடும் எனவும் ஏற்கனவே ஐஐஎம் நிறுவனங்களின் இயக்குநர்கள் கூறியுள்ளது நினைவிருக்கலாம்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications