மதுரை: சித்திரை திருவிழாவில் கார் குண்டு வெடிக்கும்- கருணாநிதிக்கும் குண்டு மிரட்டல்
மதுரை:மதுரையில் சித்திரை திருவிழா அன்று கார் குண்டு வெடிக்கும் என மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகி ராஜாவுக்கு அல்-உம்மா அமைப்பின் பெயரில் மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
அதே போல முதல்வர் கருணாநிதி மதுரை வரும் போது அவர் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும் எனவும் மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
மதுரையில் உலகப் புகழ் பெற்ற சித்திரை திருவிழா கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் வெகு விமர்ச்சையாக தொடங்கியது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்சியான மீனாட்சி அம்மன்-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் வரும் 29ம் தேதி நடைபெறவுள்ளது.
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி மே மாதம் 2ம் தேதி நடைபெறுகிறு.
இதையொட்டி மீனாட்சி அம்மன் கோவிலிலும், வைகை ஆற்றிலும் போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 14 இடங்களில் ரகசிய கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் சித்திரை திருவிழாவில் கார் குண்டு வெடிக்கும் என அல்-உம்மா அமைப்பின் பெயரில் மீனாட்சி அம்மன் நிர்வாக அதிகாரி ராஜாவுக்கு ஒரு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது,
மதுரை சித்திரை திருவிழாவில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் ஏவி மேம்பாலத்திலும், முக்கிய நகைக்கடைகளிலும் குண்டு வெடிக்கும். மேலும் மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள தெற்காவணி மூல வீதியில் கார் குண்டு தாக்குதலும் நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.
இக்கடித்ததின் பின் பகுதியில் ஏ.வெங்கடேஷ், அல் அல் உல்மா ஆதரவாளர், நெல்லை என்ற முகவரி உள்ளது.
இதுகுறித்து நிர்வாக அதிகாரி ராஜா மீனாட்சி அம்மன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இதேபோல மதுரையில் உள்ள ஒரு கல்லூரியின் பெயருக்கு வந்த இன்னொரு மிரட்டல் கடிதத்தில், முதல்வர் கருணாநிதி மதுரை வரும் போது அவர் மீது வெடிகுண்டு தாக்கதல் நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications