கருணாநிதி பொய் சொல்றார்-ஜெ சொல்கிறார்
சென்னை: காவிரிப் பிரச்சினை தொடர்பாக நடந்த அனைத்துக் கட்சி கூட்டம் குறித்து பொய்யாயன தகவல்களை சட்டசபையில் தெரிவித்து வருகிறார் முதல்வர் கருணாநிதி. இதனால் அவர் மீது உரிமை மீறல் பிரச்சினை கூட கொண்டு வரலாம் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு வெளியானதற்குப் பின்னர் கருணாநிதி தமிழக நலனுக்காக பாடுபடவில்லை என மக்கள் நன்கு அறிவர். நடுவர் மன்றத் தீர்ப்பை மத்திய அரசின் அரசிதழில் வெளியிட கோரிக்கை எழுப்பியதற்கு பல வித்தைகளை காட்டினார்.
இரண்டாவது முறையாக அனைத்துக் கட்சி கூட்டம் ஒன்றினை 15ம் தேதி கூட்டினார். அதில் தமிழக அரசு அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதை அதிமுக எடுத்து சொன்னது.
மறுபடியும் நடுவர் மன்றம் சென்றால் பல ஆண்டுகள் வீணாகும், சம்பந்தப்பட்ட மாநிலங்கள் உச்சநீதிமன்றம் செல்லும் போது, தமிழகம் மட்டும் நடுவர் மன்றம் செல்வது பயனளிக்காது என சுட்டி காட்டியது.
இதற்கு கருணாநிதியும் துரைமுருகனும் நடுவர் மன்றத்திற்கு செல்ல வேண்டும் என கூறினர். தேவைப்பட்டால் உச்சநீதிமன்றம் செல்லலாம் என்றனர்.
இந்த கூட்டம் நடந்துக் கொண்டிருக்கும் போதே கருணாநிதி ஒரு தீர்மானத்தை எழுதி, அதை அதிமுக சார்பில் சென்ற இருவரிடம் காண்பித்தார். அந்த தீர்மானத்தில் அதிமுகவிற்கு உடன்பாடு இல்லை, உச்சநீதிமன்றத்திற்கு செல்ல வேண்டும். அதற்கு அரசு உடன்படாவிட்டால் அதிமுக மேற்படி தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது என பதிவு செய்யும்படி கழகப் பிரதிநிதிகளால் வற்புறுத்தப்பட்டது.
ஆனால் உடனடியாக கருணாநிதி வந்திருந்தவர்களுக்கு நன்றி தெரிவித்து கூட்டத்தை முடித்து விட்டார். எனவே அன்று எந்தத் தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை என்பதுதான் உண்மை.
ஆனால் 20ம் தேதி சட்டமன்றத்தில் காவிரி பிரச்சனை சம்பந்தமாக கொண்டு வந்த தீர்மானத்தில், அனைத்துகட்சி கூட்டத்திற்கு வந்த ஓ.பன்னீர்செல்வம் ஆரம்பத்தில் ஒத்துக் கொண்டதாகவும், பின்னர் கழக சட்ட ஆலோசகர் ஜோதியின் வற்புறுத்தலால் அதனை மாற்றிக் கொண்டதாகவும் கூறியிருக்கிறார்.
கருணாநிதி கூறியிருப்பது தவறான செய்தி. அனைத்துக் கட்சி கூட்டத்தில் எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. கூட்டம் முடிந்து 15 நிமிடங்கள் கழித்து அவசரமாக அரசு சார்பில் ஒரு செய்திக்குறிப்பு வெளியிப்பட்டது.
கூட்ட நடவடிக்கைகளை அரசின் சுருக்கெழுத்தாளர்கள் காலை முதல் ஒரு நிமிடம் கூட விடாமல் பதிவு செய்து கொண்டு இருந்தார்கள். இவ் வகையான கூட்டத்தில் கடைப்பிடிக்கப்படும் நடைமுறையும் அதுதான்.
மேற்படி கூட்டத்தில் பதிவு செய்யப்பட்டவற்றை நகல் எடுத்து அதனை கருணாநிதி பத்திரிக்கையாளர்களுக்கு அனுப்ப வேண்டும். அப்போது நடுவர் மன்றம் செல்வது குறித்து தமிழக அரசு முடிவு எடுத்தால் அதற்கு அதிமுக மறுப்பு தெரிவிக்கிறது என்பதையும் உடன் சேர்த்து எழுதுங்கள் என வலியுறுத்தப்பட்டது தெரிய வரும்.
தமிழக அரசின் தீர்மானத்தை அதிமுக ஏற்றுக் கொள்ளவில்லை. பதிவு செய்யப்பட்ட நடவடிக்கைகளுக்கு எதிராக கருணாநிதி பொய் பேசுகிறார் என்றால் அவர் மீது உரிமை மீறல் பிரச்சனை ஏன் எழுப்ப கூடாது என்பது குறித்து அதிமுக யோசிக்கிறது.
இந்த அறிக்கை வெளியிட்ட பின் மேற்படி நடவடிக்கை குறிப்புகளை முதல்வர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, மாற்றவோ அல்லது அழிக்கவோ சொனனால் அவ்வாறு செய்யக்கூடாது என சம்பந்தப்பட்ட துறையை கேட்டுகொள்கிறோம். சுருக்கெழுத்தாளர்களின் அனைத்து நோட்டு புத்தகங்களையும் சீல் வைக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.
காவிரி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது கருணாநிதி ஒரு புதிய பொய்யை சொல்லியிருக்கிறார். அதாவது உச்சநீதிமன்றத்திற்கு சென்றால் தமிழகத்திற்கு நஷ்டம் உண்டாகும் என கூறியுள்ளார்.
உச்சநீதிமன்றம் பற்றி இப்படி ஒரு மோசமான கருத்தை கருணாநிதி கொண்டிருப்பது அதனை அவமதிப்பது போலாகும். உச்சநீதிமன்றம் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றும் நீதிமன்றம். அது தமிழகத்திற்கு பகைவனுமல்ல, கர்நாடகத்திற்கு நண்பனும் அல்ல.
மேல்முறையீட்டு நீதிமன்றம் என்ற முறையில் உச்சநீதிமன்றம் வழக்கை விசாரிக்கும். நல்ல முறையில் வழக்கை நடத்தினால் நமக்கு நல்ல தீர்ப்பு கிடைக்கும்.
கருணாநிதிக்கு கர்நாடகத்தில் குடும்ப டிவி சொத்து உள்ளது. துரைமுருகனுக்கோ அவரது மாமனார் வீடு கர்நாடகத்தில்தான் உள்ளது. அவரது மாமனார் அங்கு பெரிய அளவில் பிசினஸ் செய்கிறார். எனேவ அவருக்கும் கர்நாடகத்தைப் பகைத்துக் ெகாள்ள முடியாது.
காவிரி பிரச்சனை, திமுக அரசு இருக்கின்ற வரை தீரப் போவதில்லை. காவிரி பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்றால் திமுக அரசு ஒழிந்து அதிமுக நல்லாட்சி மலர வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு நற்கதி ஏற்படும் என தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்?












Click it and Unblock the Notifications