முஸ்லீம் குழந்தைக்கு குருவாயூரில் துலாபாரம்!
குருவாயூர்:குருவாயூரில் உள்ள பிரபல கிருஷ்ணர் கோவிலில் முஸ்லீம் சமுதாயத்தைச் சேர்ந்த குழந்தைக்கு துலாபாரம் கொடுக்கப்பட்டது.
கிருஷ்ணர் கோவிலில் உள்ள துலாபாரத்தில், பலரும் நேர்த்திக் கடன் செலுத்தி தங்களது எடைக்கு எடை பொருட்களை காணிக்கையாக கொடுப்பார்கள். தங்கம் முதல் சாதாரண சர்க்கரை வரை பல்வேறு வகையான பொருட்களை துலாபாரமாக கொடுக்கலாம்.
இந்த நிலையில் முஸ்லீம் சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு குழந்தைக்கு துலாபாரம் கொடுக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் பத்தனம் திட்டாவைச் சேர்ந்த சாஜி என்பவரின் 6 மாத மகள் அலீசா. இவருக்கு எடைக்கு எடை துலாபாரம் கொடுப்பதாக சாஜி வேண்டிக் கொண்டிருந்தார்.
அதன்படி கிருஷ்ணர் கோவிலுக்கு வந்த சாஜி தம்பதியினர் தங்களது மகள் அலீசாவை தராசுத் தட்டில் உட்கார வைத்தனர். பின்னர் மற்றொரு தட்டில் அலீசாவின் எடைக்குத் தகுந்த அளவு சர்க்கரை இடப்பட்டது. பின்னர் வாழைப்பழங்களும் துலாபாரமாக வழங்கப்பட்டது.
பொதுவாக இந்து சமூகத்தினரே துலாபாரம் வழங்குவது வழக்கம். இந்த நிலையில் முஸ்லீம் குழந்தைக்கு துலாபாரம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications