மலேசிய சிறையில் 4000 தமிழர்கள்-கருணாநிதி
சென்னை:வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்பவர்கள் மீது கடுமையான நடிவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
சட்டபேரவையில் காங்கிரஸ்,பாமக, இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்த முதல்வர் கருணாநிதி,
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றியதாக 143 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இது சம்பந்தமாக 108 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 63 வழக்குகள் விசாரணையில் உள்ளன.
ஒரு ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் மூலம் வெளிநாடுகளுக்கு ஆட்கள் அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதில் பெரும்பாலும் மருத்துவ துறை, பொறியியல் துறை சம்பந்தப்பட்டவர்கள் அதிகமாக உள்ளனர். 2006-07ல் மட்டும் 195 பேர் அனுப்பப்பட்டுள்ளனர்.
வெளிநாடு செல்பவர்களில் தமிழர்கள் அதிகமாக உள்ளனர் என பீட்டர் அல்போன்ஸ் கூறினார். இதற்கு ஒரு முறை அண்ணா, கடல் நீர் ஏன் உப்பாக இருக்கிறதென்றால், வெளிநாடு செல்லும் தமிழர்கள் சிந்தும் கண்ணீர்தான் அதற்கு காரணம் என்று கூறினார்.
வேலை வாங்கி தருவதாக மோசடி செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
வெளிநாட்டில் வேலை செய்யும் தமிழக பெண்கள் பாலியியல் கொடுமைக்கு ஆளாவது குறித்து அயல்நாட்டு வேலை வாய்ப்பு அலுவலகத்துடன் கலந்து பேசி அதனை தடுப்பதற்கு ஆவண செய்யப்படும்.
மலேசிய சிறையில் 4,000 தமிழர்கள் சிக்கியிருப்பதாக செய்தி அறிந்து, மலேசிய தமிழக அதிகாரிகளிடம் கேட்ட போது அத்தனை பேர் இருப்பதாக ஒப்புகொள்ளவில்லை. இவர்களை மீட்க மத்திய அரசு மூலம் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications