வடகிழக்கில் நாச வேலை- வங்கதேச உளவு பிரிவுடன் கை கோர்க்கும் ஐஎஸ்ஐ
நியூயார்க்:வங்கதேச உளவுப் பிரிவுடன் இணைந்து இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் பெருமளவில் தீவிரவாத செயல்களை பாகிஸ்தான் உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐ. செயல்படுத்தி வருவதாக அமெரிக்க உளவுப் பிரிவு கூறியுள்ளது.
அமெரிக்க உளவுப் பிரிவைச் சேர்ந்த ஸ்டார்ட்பார் என்பவர் இந்தியா: இஸ்லாமியமயமாகும் வட கிழக்கு என்ற பெயரில் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில் ஸ்டார்ட்பார் கூறியுள்ளதாவது
பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ நிறுவனம், இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களைக் குறி வைத்துள்ளது. அங்குள்ள உல்பா தீவிரவாதிகள் மற்றும் முஸ்லீம் தீவிரவாத அமைப்புகளை ஒருங்கிணைத்து அவர்கள் மூலம் வட கிழக்கு மாநிலங்களில் தீவிரவாத செயல்களை ஊக்குவித்து வருகிறது.
பாகிஸ்தானின் இந்த செயலுக்கு வங்கதேச உளவுப் பிரிவும் முழுமையாக ஒத்துழைத்து உதவி வருகிறது. இரு உளவுப் பிரிவுகளும் இணைந்தே வட கிழக்கு மாநிலங்களில் தீவிரவாதத்தை பரப்பி வருகின்றன.
வட கிழக்கு மாநிலங்களில் இஸ்லாமை பரப்பும் வேலையிலும் இரு உளவுப் பிரிவுகளும் இறங்கியுள்ளன. இந்தியா உலக அரங்கில் வல்லரசு நாடாக உருவாவதைத் தடுக்க விரும்பும் சீனாவின் மறைமுக ஆதரவுடன் பாகிஸ்தான் இந்த வேலையில் ஈடுபட்டுள்ளது.
காஷ்மீரைப் போல வட கிழக்கிலும் இந்தியாவுக்கு தலைவலியைக் கொடுப்பதன் மூலம் இந்தியாவின் பொருளாதாரத்தையும் சீர்குலைக்க பாகிஸ்தான் எண்ணுகிறது.
முன்பை விட தற்ேபாது ஐஎஸ்ஐக்கும், வங்கதேச உளவு அைமப்புகளுக்கும் இடையே உறவு வலுப்பட்டுள்ளது. வட கிழக்கில் செயல்பட்டு வரும் அனைத்து தீவிரவாத அமைப்புகளையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வர இவை இரண்டும் தற்ேபாது தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் ஐ.எஸ்.ஐ உதவி வருகிறது என்று கூறியுள்ளார் ஸ்டார்ட்பார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications