ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா இன்று மோதல்
செயிண்ட் லூசியா:உலககோப்பை போட்டியின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இன்று ஆஸ்திரேலியாவும் தென் ஆப்பிரிக்காவும் மோதவுள்ளனர்.
உலககோப்பை போட்டியின் இரண்டாவது அரையிறுதி போட்டி இன்று செயிண்ட் லூசியில் நடைபெறவுள்ளது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவும், தென் ஆப்பிரிக்காவும் மோதுகின்றன.
இதற்கு முன் இரு அணிகளும் 1999ம் ஆண்டு நடந்த உலககோப்பை அரையிறுதி போட்டியில் இரு அணிகளும் மோதின இந்த போட்டி டை ஆனாதால் ஆஸ்திரேலியா இறுதி போட்டிக்கு சென்றது.
பின்னர் இறுதி போட்டியில் பாகிஸ்தான அணியை வீழ்த்தி உலககோப்பையை கைப்பற்றியது. அதன் பின்னர் இந்த முறை தான் இரு அணிகளும் அரையிறுதி போட்டியில் சந்திக்கிறது.
தென் ஆப்பிரிக்கா அணியை பொறுத்தவரை அந்த அணியின் கேப்டன் ஸ்மித், டிவில்லியர்ஸ், கல்லீஸ், கிப்ஸ் ஆகியோர் போட்டிங்கில் நல்ல பார்மில் உள்ளார்கள். பந்து வீச்சில் போலக், கல்லீஸ், ஹால், நெல் ஆகியோர் சிறப்பான பார்மில் இருக்கிறார்கள்.
ஆஸ்திரேலியா அணி பேட்டிங், பவுலிங், பில்டிங் என மூன்று துறைகளிலும் சிறப்பாக இருக்கிறது. இந்த உலககோப்பை போட்டியில் ஒரு தேல்வி கூட அடையமால் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
பேட்டிங்கில் ஹைடன் எதிர் அணிக்கு அச்சுறத்தலாக விலங்கி வருகிறார். இவர் இந்த உலககோப்பை போட்டியில் மொத்தம் 9 போட்டிகளில் விளையாடி 580 ரன்களை குவித்துள்ளார். கேப்டன் ரிக்கி பாண்டிங் 480 ரன்களை குவித்துள்ளார்.
பவுலிங்கிள் மெக்ராத், ஹாக், டெய்ட் ஆகியோர் சிறப்பான பர்மில் உள்ளார்கள். தென் ஆப்பிரிக்கா அணிக்கு உலககோப்பை போட்டிகளில் ராசி இல்லாத அணி என்று கூறப்படும் அணி இந்த அணி இரண்டு மூன்று முறை அறையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றும் இறுதி போட்டிக்கு செல்ல முடியமால் போய்யுள்ளது.
ஒரு முறை மழையால் உலககோப்பை பறிபோனது. மற்றொரு முறை போட்டி டை ஆனாதல் உலககோப்பை கனவு தகர்ந்தது.
இந்த முறை எப்படியும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி கோப்பையை வெல்லுவோம் என அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் போலக் கூறியுள்ளார்.
இந்த முறையாவது தென் ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி உலககோப்பையை கைப்பற்றுமா? என கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications