மதுரை மக்களை மயக்கிய விமான சாகசம்
மதுரை:இந்திய விமானப்படையின் சூரிய கிரண் விமான சாகசம் மதுரை மக்களை மயக்கியது.
சென்னையில் நடந்தது போல மதுரையிலும் இன்று விமானப்படையின் பவள விழாவையொட்டி விமான சாகச நிகழ்ச்சி நடந்தது. தென் மாவட்டங்களில் முதல் முறையாக இந்த விமான சாகச நிகழ்ச்சி நடந்ததால் ஆயிரக்கணக்கான மக்கள் விமான சாகசத்தைப் பார்க்க திரண்டிருந்தனர்.
![]() |
விரகனூர் அணை-ரிங் ரோடு சந்திப்பில் இந்த நிகழ்ச்சி நடந்தது. எள் விழுந்தால் எண்ணெய் ஆகி விடும் அளவுக்கு பெரும் திரளான மக்கள் கூட்டம் விமான சாகசத்தைக் காண திரண்டிருந்தது.
நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக 6 சூரிய கிரண் ஜெட் விமானங்கள் நடத்திய சாகசம் மதுரை மக்களை மயக்கி விட்டது. இதுவரை இப்படிப்பட்ட சாகச நிகழ்ச்சியை மதுரை மக்கள் கண்டிராததால் சூரிய கிரண் சாகசம் அவர்களுக்கு பெரும் வியப்பையும், திரில்லையும் கொடுத்தது.
இதில் ஒரு விமானம் வானிலேயே இதயம் போன்ற வடிவத்தை புகையால் உருவாக்கிக் காட்டியபோது கூடியிருந்த மக்கள் பரவசத்துடன் பார்த்து மகிழ்ந்தனர். சுமார் 20 நிமிடங்கள் இந்த சாகச நிகழ்ச்சி நடந்தது.
விமான சாகச நிகழ்ச்சியையொட்டி சிறப்புப் பேருந்துகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறை மேற்கொண்டிருந்தது.
-
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி!













Click it and Unblock the Notifications