செக்ஸ் டாக்டர் பிரகாஷ் ஒரு வழக்கில் விடுதலை
சென்னை:தனியார் நிறுவன அதிகாரியை துப்பாக்கியால் சுட்ட வழக்கிலிருந்து செக்ஸ் டாக்டர் பிரகாஷ் விடுதலை செய்யப்பட்டார்.
பெண்களை ஆபாசமாக படம் எடுத்து அவற்றை இன்டர்நெட்டில் வெளியிட்டதாக பிரபல எலும்பு முறிவு மருத்துவர் பிரகாஷ் கைது செய்யப்பட்டது தமிழகத்தையே பெரும் பரபரப்பில் ஆழ்த்தியது.
இதுதவிர இளம் பெண்களுடன் சிறுவர்களை உடலுறவு கொள்ளச் செய்து அதை வீடியோவில் படமாக்கி சிடிக்களாகவும், இன்டர்நெட் மூலமாகவும் உலா வரச் செய்ததாகவும் பிரகாஷ் மீது வழக்கு தொடரப்பட்டது.
பிரகாஷின் லீலைகளில் சில பிரபல பெண்மணிகளுக்கும் தொடர்பு இருப்பதாக அப்போது பெரும் பரபரப்பு கிளம்பியது. 2001ம் ஆண்டு பிரகாஷ் கைது செய்யப்பட்டார். தற்போது சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பின்னர் அவர் மீது தனியார் நிறுவன மேலாளரை துப்பாக்கியால் சுட்டது, கஞ்சா வைத்திருந்தது உள்ளிட்ட வழக்குகளும் போடப்பட்டன.
1998ம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி தனது வாடிக்கை பெண்களுடன் தாஜ் கோரமண்டல் ஹோட்டலுக்குப் பிரகாஷ் போயிருந்தார். அப்போது காரை எடுப்பது தொடர்பாக பிரகாஷுக்கும், தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளரகப் பணியாற்றி வந்த ஜோஸ் மாத்யூஸ் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த பிரகாஷ், ஜோஸ் மாத்யூஸை துப்பாக்கியால் சுட்டார். மேலும் பிரகாஷுக்கு ஆதரவாக நைஜீரியாவைச் சேர்ந்த வாஜித் என்பவர் தனது கையை கடித்ததாகவும் போலீஸில் புகார் கொடுத்தார் மாத்யூஸ்.
இதன் பேரில் பிரகாஷ், வாஜித் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது. வாஜீத் தப்பி தலைமறைவாகி விட்டார். பிரகாஷ் மீது வழக்கு தொடரப்பட்டு அந்த வழக்கிலும் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கை நேற்று விசாரித்த சென்னை முதலாவது விரைவு நீதிமன்ற நீதிபதி பங்கஜவல்லி பிரகாஷை விடுதலை செய்து உத்தரவிட்டார். நீதிபதி அளித்த தீர்ப்பில், வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள முக்கிய சாட்சியான ஜோஸ் மாத்யூ தன்னை யார் சுட்டது என தெளிவாகத் தெரியவில்லை என்று கூறி பிறழ் சாட்சியம் அளித்துள்ளார்.
மேலும் வழக்கில் சம்பந்தப்பட்ட அனைத்து சாட்சிகளும் இவ்வாறு பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர். பிரகாஷுக்கு துப்பாக்கி வைத்திருக்க உரிமம் உள்ளது. எனவே சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்த பிரிவின் கீழ் பிரகாஷை கைது செய்து நடவடிக்கை எடுக்க முடியாது.
பிரகாஷ் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. எனவே அவரை விடுதலை செய்து உத்தரவிடுகிறேன் என்று நீதிபதி கூறியிருந்தார்.
இந்த வழக்கில் விடுதலையாகி விட்டாலும் மற்ற வழக்குகளில் பிரகாஷ் இன்னும் விடுதலை ஆகாததால், இப்போதைக்கு அவரால் வெளியே வர முடியாது.
-
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications