புலிகளுக்கு தமிழகத்தில் இடமில்லை-கருணாநிதி
சென்னை:நான் விடுதலைப் புலிகளின் ஆதரவாளன் கிடையாது. தடை செய்யப்பட்ட புலிகள் அமைப்புக்கு தமிழகத்தில் இடம் இல்லை என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
சட்டசபையில், காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்குப் பதில் அளித்து முதல்வர் கருணாநிதி இன்று பேசினார். அவர் பேசுகையில், நான் விடுதலைப் புலிகளின் ஆதரவாளன் அல்ல. தடை செய்யப்பட்ட புலிகள் அமைப்பு தமிழகத்தைக் களமாகக் கொண்டு செயல்பட ஒரு போதும் அனுமதிக்கப்பட மாட்டாது.
தமிழகத்தில் புலிகளின் நடமாட்டமும், செயல்பாடுகளும் அதிகரித்து விட்டதாக கூறுவதை ஏற்க முடியாது. இரும்புக் குண்டுகள், வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதை வைத்து அவை விடுதலைப் புலிகளுக்காக கடத்தப்பட்டன என்று கூறி விட முடியாது.
வெடிபொருள், இரும்புக் குண்டுகள் கடத்தலில் ஈடுபட்டுள்ளவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தீவிரவாத செயல்களில் ஈடுபடுவோர் அனைவரையும் விடுதலைப் புலிகள் என்று கூறுவது பொருத்தமற்றது. இதை வைத்து நான் புலிகளை ஆதரிப்பதாக கூறக் கூடாது.
தமிழகத்தின் முக்கிய பகுதிகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டபோதெல்லாம் அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தமிழகத்தில் தீவிரவாதமும், பயங்கரவாதமும் தலை தூக்க தமிழ அரசு அனுமதிக்காது.
தென்காசியில இந்து முன்னணித் தலைவர் கொலை செய்யப்பட்டபோது அதில் தொடர்புடைய 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது குண்டர் சட்டமும் பிரயோகிக்கப்பட்டது. இதன் மூலம் அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் யாரையும் இந்த அரசு விட்டு வைக்காது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
விடுதலைப் புலிகளுக்கு தமிழகத்தில் இடமில்லை. அவர்களுடைய நோக்கமும், குறிக்கோளும் அனைவரும் அறிந்ததே. தமிழகத்தில் புலிகள் எந்தவிதமான பாதகச் செயலையும் செய்யவில்லை. அதுபோன்ற நடவடிக்கையிலும் ஈடுபட மாட்டார்கள்.
அதுபோன்ற செயலில் அவர்கள் ஈடுபட்டால் அதை தமிழக அரசு அனுமதிக்காது என்றார் கருணாநிதி.
முன்னதாக நேற்று சட்டசபையில் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரன் விடுதலைப் புலிகள் நடமாட்டம் தமிழகத்தில் அதிகரித்து விட்டது. பிரபாகரனை கைது செய்து கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டிப் பேசியிருந்தது நினைவிருக்கலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications