மணமகன் திடீர் ஓட்டம்-மணமகள் தவிப்பு
சென்னை:திருமண நேரத்தில் மணமகன் ஓடியதால் திருமண மண்டபத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியின் மகள் ஜோதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது).
இவருக்கும் சென்னை புளியந்தோப்பை சேர்ந்த வேலு என்பவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இன்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
நேற்று இரவு சென்னை புளியந்தோப்புவில் உள்ள ஜெயின் திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நடந்தது.
ஆனால் பெண் வீட்டார் இரவு 10 மணிக்கு மேல் தான் வந்தனர். இதனால் மண்டபத்திற்கு வந்த பெண் வீட்டாரிடம், மாப்பிள்ளை வீட்டார் சரியாக பேசவில்லை.
இந் நிலையில் இன்று காலை 7 மணி முதல் 9 மணிக்குள் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. மணமேடைக்கு மணப்பெண் வந்து அமர்ந்தார். ஆனால் மாப்பிள்ளை திருமண மண்டபத்தில் இருந்து எங்கே எஸ்கேப் ஆகிவிட்டார். இதனால் திருமண மண்டபத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து பாலசுப்பிரமணி புளியந்தோப்பு காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், கடந்த 2 மாதத்திற்கு முன்பு வேலுவுக்கும் என் மகள் ஜோதிக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
வரதட்சணையாக 20 பவுன் நகையும், ஒரு மோட்டார் சைக்கிளும் மாப்பிள்ளை வீட்டார் கேட்டனர்.
அதற்கு நாங்கள் 10 பவுன் நகையும், மோட்டார் சைக்கிளும் தருவதாக ஒப்புக்கொண்டோம். இதற்கு அவர் அப்போது ஒத்துக்கொண்டனர். ஆனால் தற்போது கூடுதல் வரதட்சணை கேட்கிறார்கள்.
இதனால் திருமணத்தை நிறுத்தும் நோக்கில் மாப்பிள்ளையை அவர் எங்கோ அனுப்பிவிட்டனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல மணமகன் தாயார் ஆறுமுகமும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் நாங்கள் கூடுதல் வரதட்சணை எதுவும் கேட்கவில்லை, நேற்று இரவு பெண் வீட்டார் காலதாமதமாக வந்ததால் என் மகன் பொறுமை இழந்து எங்கோ ஓடி வீட்டான் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம்












Click it and Unblock the Notifications