இட ஒதுக்கீடு-லேகாசபா, ராஜ்யசபாவில் பெரும்கூச்சல், குழப்பம்- அவைகள் ஒத்திவைப்பு
டெல்லி:இட ஒதுக்கீடு, பாஜக எம்பியின் பெண் கடத்தல் விவகாரத்தால் இன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும் கூச்சல் குழப்பம் நிலவியது. இதையடுத்து இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் சுமார் ஒரு மாத இடைவெளிக்குப் பின் இன்று மீண்டும் கூடியது. மக்களவை கூடியதும் மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர் பேசிய சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி, குஜராத் மாநில பா.ஜ.க எம்பி பாபுபாய் கத்தாரா போலி பாஸ்போர்ட், பெண் கடத்தல் வழக்கில் சிக்கியிருப்பது கண்டத்திற்குரியது. இதனால் கத்தாராவை கூட்டத் தொடர் முடியும் நாள் வரை அனுமதிக்க முடியாது என்று அறிவித்தார்.
இதற்கு பாஜக எம்பிக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். பதிலுக்கு காங்கிரஸ் எம்பிக்கள் குரல் கொடுத்தனர். இதனால் ஒரே கூச்சல் நிலவியது.
அப்போது திமுக, பாமக, மதிமுக எம்பிக்கள் எழுந்து மத்திய அரசு உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான இடஒதுக்கீடு குறித்து விவாதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அவர்களுக்கு ஆதரவாக லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் எம்பிகளும் குரல் தந்தனர்.
ஆனால், பாஜக எம்பிக்கள் தொடர்ந்து கத்தாரா விஷயத்தில் குரல் தந்ததால் தமிழக எம்பிக்களும் ராஷ்ட்ரீய ஜனதா தள எம்பிக்களும் அவையில் மையப் பகுதியை நோக்கி ஓடி இட ஒதுக்கீடு குறித்து விவாதிக்க வேண்டும் என்றனர்.
அப்போது காங்கிரஸ், இடதுசாரி எம்பிக்கள் எழுந்து அவரவர் மாநில பிரச்சனைகளை கிளப்பினர். இதனால் பெரும் குழப்பம் நிலவியது. யார் என்ன பேசுகிறார்கள் என்றே கேட்காத அளவுக்கு குழப்பம் நீடித்தது.
இதையடுத்து அவையை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார். இதே குழப்பம் தான் ராஜ்யசபாவிலும் நீடித்தது. இதனால் அந்த அவையும் ஒத்திவைக்கப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications