27%: திமுக, பாமக, லாலு, பாஸ்வான் தீவிரம்-இன்று ஐமுகூ-இடதுசாரிகள் ஆலோசனை
டெல்லி:பிற்பட்டோருக்கான 27 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பான பிரச்சினையில் முடிவு எட்டும் பொருட்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும், இடது சாரிக் கட்சிகளின் தலைவர்களும் இன்று முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளனர்.
நேற்று இரவு பிரதமர் மன்மோகன் சிங் இல்லத்தில் அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரைவக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில், இட ஒதுக்கீடு பிரச்சினை தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
ஆனால், இக் கூட்டத்தில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை. இதையடுத்து இடதுசாரிக் கட்சிகளுடனும் கூட்டணிக் கட்சிகளுடனும் இன்று ஆலோசனை நடத்த முடிவு செய்யப்பட்டது.
முன்னதாக நேற்று பிரதமரை தனித்து சந்தித்த மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜூன் சிங் அவருடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
இந்த சந்திப்பின்ேபாது பொது பிரிவினருக்கான மாணவர் சேர்க்கையை இந்த ஆண்டு வழக்கம் போல மேற்கொள்வது எனவும், பிற்படுத்தப்பட்ேடாருக்கான மாணவர் சேர்க்கையை உச்சநீதிமன்ற தீர்ப்பு வரும் வரை நிறுத்தி வைத்து விட்டு பின்னர் மேற்ெகாள்ளலாம் எனவும் விவாதிக்கப்பட்டது.
ஆனால், பின்னர் நடந்த அமைச்சரைவக் கூட்டத்தில் மத்திய அரசின் இந்த யோசனைக்கு திமுக, பாமக, ராஷ்டிரிய ஜனதாதளம் ஆகிய கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இதையடுத்தே ஐக்கிய முற்ேபாக்குக் கூட்டணித் தலைவர்களும், இடது சாரி தலைவர்களும் ஆலோசிக்கலாம் என் முடிவு எடுக்கப்பட்டது. இதுகுறித்து ராஷ்டிரிய ஜனதாதளத் தலைவரும், ரயில்வே அமைச்சருமான லாலு பிரசாத் யாதவ் கூறுகையில், இட ஒதுக்கீடு பிரச்சினை குறித்து இக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்றார்.
இதற்கிடையே, இட ஒதுக்கீடு பிரச்சினையில் தனித் தனி மாணவர் சேர்க்கை என்ற அர்ஜூன் சிங் யோசனையை ஏற்குமாறு கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களை சமாதானப்படுத்தும் பொறுப்பை வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் பிரதமர் கொடுத்துள்ளார்.
ஆனால் இதை பாமக, திமுக உள்ளிட்ட முக்கிய கூட்டணிக் கட்சிகள் ஏற்கவில்லை. மாறாக, இதுகுறித்து நாடாளுமன்றத்தின் கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டு இதுெதாடர்பாக விவாதிக்க வேண்டும் என அவை கோரியுள்ளன. ஆனால் அைத மத்திய அரசு ஏற்கவில்லை.
இன்றைய கூட்டத்தில் நல்ல முடிவு எட்டப்படும் என ஐக்கிய முற்ேபாக்குக் கூட்டணிக் கட்சிகள் கருதுகின்றன.
நேற்றைய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பிரணாப் முகர்ஜி, சிவராஜ் பாட்டீல், ப.சிதம்பரம், எச்.ஆர்.பரத்வாஜ் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் கலந்து ெகாண்டனர்.
இந்த ஆண்டே 27 சதவீத இட ஒதுக்கீட்டை ஐஐஎம், ஐஐடிகளில் அமல்படுத்த வேண்டும் என திமுக, லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், பாமக, பாஸ்வானின் கட்சி ஆகியவை ஒற்றைக் காலில் நிற்கின்றன.
-
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications