282 தமிழக ஊராட்சி தலைவர்களுக்கு விருது

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: தமிழகத்தை சேர்ந்த 282 ஊராட்சி தலைவர்களுக்கு நிர்மல் கிராம் புரஸ்கார் விருது வழங்கப்பட உள்ளது.

தூய்மையுடன் விளங்கும் கிராமங்களுக்கு மத்திய அரசு நிர்மல் கிராம் புரஸ்கார் விருதுகளை வழங்கி ஊக்குவிக்கிறது.

இந்த ஆண்டுக்கான விருது தேசிய அளவில் 4500 ஊராட்சிகளுக்குக் கிடைத்துள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 282 ஊராட்சிகளும் அடங்கும்.

ரூ.50,000 முதல் ரூ.5 லட்சம் வரை ரொக்க பணமும், சான்றிதழும் பரிசாக வழங்கப்படும்.

விருது வழங்கும் விழா மே மாதம் 4ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. குடியரசு தலைவர் அப்துல் கலாம் விருதுகளை வழங்குகிறார்.

அனைவருக்கும் விருது வழங்க கூடுதல் நேரமாகும் என்பதால் மாநிலத்திற்கு ஒரு ஊராட்சி தலைவர் என விருதுகள் வழங்கப்படவுள்ளன.

தமிழகத்திலிருந்து விருது பெறும் 282 ஊராட்சித் தலைவர்களும் சென்னையிலிருந்து ரயில் மூலம் அழைத்து செல்லப்பட திட்டமிடப்பட்டது. ஆனால் அனைவருக்கும் ரயிலில் இடம் கிடைக்கவில்லை. இவர்களுக்காக ரயில்வே நிர்வாகம் கூடுதல் பெட்டி எதுவும் ஒதுக்க முன்வரவில்லை.

இருப்பினும் அனைவரையும் அழைத்துச் செல்ல மாநில அரசு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+