நல்ல சரக்கு வந்தால் கள்ளச்சாராயம் ஒழியும்-கருணாநிதி
சென்னை:கள்ளச்சாராயத்தை ஒழிக்க இயலாது. அதை ஒழிக்க நல்ல சரக்காக உற்பத்தி செய்ய வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
சட்டசபையில் இதுகுறித்து கருணாநிதி கூறுகையில், கள்ளச்சாரம் என்பது ஒழிக்க முடியாதது. காமராஜர் ஆட்சியிலேயே கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியவில்லை.
சாராயத்துக்கு எதிராக போராடிய மகாத்மா காந்தி பிறந்த போர்பந்தரில் அவரது வீட்டுக்கு அருகேயே பெரிய கிணறு தோண்டி கள்ளச்சாராயம் காய்ச்சியதாக நாடாளுமன்றத்தில் ஒருமுறை இந்திராகாந்தி வருத்தப்பட்டுக் கூறினார்.
கள்ளச்சாராயத்தை ஒழிக்க, நல்ல சரக்குகளாக உற்பத்தி செய்து விற்பனை செய்வதுதான் ஒரே வழி. பாமகவினர் கூறியது போல மதுவிலக்கு திட்டத்தை கொண்டு வந்தால் அரசுக்கு ரூ. 7,000 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும்.
நஷ்டம் ஏற்பட்டாலும் பரவாயில்லை என்று மதுவிலக்கு திட்டத்தை அமுல் படுத்தினால் டாஸ்மாக் கடைகளில் வேலை பார்ப்பவர்களை என்ன செய்வது.
கள்ளச்சாராயம் பெருகி விட்டதாக அதிமுகவினர் கூறியுள்ளனர். கடந்த ஆட்சியில் 134 பேர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்துள்ளனர். 387 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் திமுக ஆட்சியில் ஒருவர் தான் உயிரிழந்துள்ளார்.
அதற்காக நான் கள்ளச்சாராயத்துக்கு ஆதரவு தருவதாக நினைக்க வேண்டும். கள்ளச்சாராயத்தை ஒழிக்க அனைவரும் ஒன்று பட்டு உழைக்க வேண்டும். கள்ளச்சாராய குற்றத்துக்கு கடும் தண்டனை அளிக்க இந்த அரசு தயராக இருக்கிறது என்றார் கருணாநிதி.
-
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications