நுழைவுத் தேர்வை ரத்து செய்தது செல்லும்-உயர்நீதிமன்றம்
சென்னைதொழிற் படிப்புக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்து தமிழக அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தை ரத்து செய்ய முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழிற் படிப்புக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்து தமிழக அரசு சட்டம் இயற்றியது. இந்த சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் அப்துல் கலாமும் ஒப்புதல் அளித்தார்.
இந்த நிலையில் அஸ்வின் குமார் என்ற மாணவர் இந்த சட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, சம்பத்குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், ஏழைகள் மற்றும் வசதி படைத்த மாணவர்களுக்கு இடையே சம நிலையை ஏற்படுத்தும் நோக்கில்தான் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு அரசுக்கு முழு அதிகாரமும் உள்ளது.
இந்த சட்டத்துக்கு மத்திய அரசும் ஆதரவு தெரிவித்துள்ளது. குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளித்துள்ளார்.
சட்டத்தில் அனைத்துப் பிரிவு மாணவர்களுக்கும் சம நிலையை ஏற்படுத்தும் வழி வகைகள் கூறப்பட்டுள்ளன. சமூக நீதியை நிலை நாட்டும் பொருட்டு, கொள்கை அடிப்படையில் கொண்டு வரப்பட்ட சட்டத்தை ரத்து செய்ய முடியாது என்று கூறி மாணவரின் மனுவைத் தள்ளுபடி செய்தார்.
இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து இந்த ஆண்டு முதல் தொழிற் படிப்புக்கான நுழைவுத் தேர்வு ரத்து முழுமையாக அமலுக்கு வருகிறது.
-
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
குழந்தைகளை பயன்படுத்தி வாக்கு கேட்டதாக வழக்கு.. விஜய்யின் தவெகவுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
தெரிந்தே இப்படி செய்யலாமா? அருண் ஐபிஎஸ்ஸை கண்டித்த ஹைகோர்ட்! தொழிலதிபர் மீதான குண்டர் சட்டம் ரத்து












Click it and Unblock the Notifications