இந்தியாவுக்கு வரும் உலகின் மாபெரும் விமானம்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: உலகின் மிகப் பெரிய விமானமான ஏர்பஸ் ஏ380 தலைநகர் டெல்லிக்கு மே 7ம் தேதியன்று வருகை தருகிறது.
உலகிலேயே மிகப் பெரிய விமானம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஏர்பஸ் ஏ380 விமானம்தான். இந்த விமானத்தில் மொத்தம் 850 இருக்கைகள் உள்ளன. இரு அடுக்குகளை கொண்ட, அதி நவீன வசதிகளுடன் கூடிய பிரமாண்ட விமானம் அடுத்த மாதம் டெல்லிக்கும் மும்பைக்கும் வரவுள்ளது.கிங்பிஷர் நிறுவனம் மட்டுமே முதன்முதலாக ஏ380 விமானத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது. இந்த விமானத்தில் முதன்முதலாக பயணம் செய்யும் பயணிகளை தேர்ந்தெடுக்க இந்நிறுவனம் சிறப்பு முகாமை நடத்துகிறது.
கிங் பிஷர் நிறுவனம், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து அக்டோபர் மாதம் முதல் இந்த விமானத்தை இயக்கவுள்ளது.
ஏ 380 விமானத்தை கடந்த பிப்ரவரி மாதம் பெங்களூரில் நடந்த விமான சாகச நிகழ்ச்சிக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்தனர். ஆனால் விமானத்தை கொண்டு வந்து நிறுத்த போதிய இட வசதியும், ரன்வேயும் இல்லாததால் அந்த முயற்சி கைவிடப்பட்டது.
தற்போதுள்ள டெல்லி மற்றும் மும்பை விமான ஓடு தளம் ஏ380 விமானம் வந்து செல்ல ஏற்றதாக உள்ளது.












Click it and Unblock the Notifications