டெஸ்டில் இன்சமாமுக்கு இடமில்லை?

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக்கிற்கு டெஸ்ட் போட்டிகளிலும் இடம் கிடைக்காது என்று தெரிகிறது.

உலககோப்பை போட்டியில் கோப்பையை வெல்லும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அணிகளில் பாகிஸ்தானும் ஒன்று. ஆனால் அந்த அணி லீக் போட்டியில் கத்துக்குட்டி அயர்லாந்து அணியிடம் படு மோசமான தேல்வி அடைந்து உலககோப்பை போட்டியிலிருந்தே வெளியோறியது.

Inzamam

இதையடுத்து இன்சமாம் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஆனால் தான் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட விரும்புவதாகவும் தெரிவித்தார்.

ஆனால் டெஸ்ட் போட்டிகளிலும் இன்சமாமை சேர்க்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விரும்பவில்லை. இதுகுறித்து வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், பாகிஸ்தான் உலகக் கோப்பையில் அடைந்த தோல்விக்கு முழு காரணம் இன்சமாம் தான் என நாங்கள் கருதுகிறோம்.

அணியை சரியாக வழிநடத்தி செல்லாது தான் இதற்கு காரணம். ஆனால் பாகிஸ்தான் வீரர்கள் பலர் இன்சமாம் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர்.

ஆனால் இதை நாங்கள் ஏற்க மாட்டோம். இனி ஒரு நாள் போட்டிகளிலும், டெஸ்ட் போட்டிகளிலும் முற்றிலும் இளைஞர்களுக்கு தான் வாய்ப்பு அளிக்க திட்டமிட்டுள்ளோம். எனவே இன்சமாம் உள்பட மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது இன்சமாம் முதுகுவலியால் அவதிப்பட்டு வருகிறார் இதுவும் அவரை அணியில் சேர்க்க மறுப்பதற்கு முக்கிய காரணம் என அவர் கூறினார்.

119 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இன்சமாம் 8813 ரன்கள் குவித்துள்ளார். இதில் 25 சதமும், 46 அரைசமும் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+