லோகநாதன் மனைவி, மகளுக்கு அரசு வேலை:அமெரிக்காவிலேயே செட்டிலாகிறார்கள்
சென்னை:அமெரிக்காவின் விர்ஜீனியா பல்கலைக்கழக வளாகத்தில் தென் கொரிய மாணவரால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக பேராசிரியர் லோகநாதனின் மனைவிக்கும், மகளுக்கும் அமெரிக்க அரசு வேலை தர முன்வந்துள்ளது. இதையடுத்து அவர்கள் இருவரும் அமெரிக்காவிலேயே செட்டிலாக முடிவு செய்து விட்டனர்.
அமெரிக்காவின் விர்ஜீனியா டெக் பல்கலைக்கழகத்தில் கடந்த வாரம் தென் கொரிய சோ சியூங் ஹூ என்ற மாணவர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் 32 பேர் உயிரிழந்தனர். இதில் தமிழகத்தை சேர்ந்த பேராசிரியர் லேகநாதனும், மும்பையை சேர்ந்த மாணவி மினால் என்பவரும் அடங்குவர்.சுட்டுக்கொல்லப்பட்ட பேராசிரியர் லோகநாதனின் விருப்பப்படி அவரது உடல் விர்ஜீனியா டெக் பல்கலைக்கழக வளாகத்திலேயே மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
லோகநாதனின் குடும்பத்தினர் 9 பேர் உடல் தகனத்திற்காக அமெரிக்கா சென்றிருந்தனர். இதற்கான செலவை தமிழக அரசே ஏற்றுக் கொண்டது.
லோகநாதன் குடும்பத்தினர் இறுதி சடங்கில் கலந்து கொண்டு நேற்று இரவு சென்னை திரும்பினர். உடல் தகன நிகழ்ச்சி குறித்து அவரது குடும்பத்தினர் கூறுகையில், லோகநாதனின் மனைவி உஷா (46). அமெரிக்காவிலேயே 2 மகள்களுடன் வசித்து வருகிறார். உஷாவுக்கு அதே பல்கலைக்கழகத்தில் அமெரிக்க அரசு வேலை வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதே போல் அவரது மகள் உமாவுக்கும் (21) வேலை வழங்கியுள்ளது.
தற்போது உமா அதே பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் படித்து வருகிறார். இன்னும் அவரது படிப்பு முடிவதற்கு 6 மாதங்கள் இருக்கிறது. அவரது படிப்பு முடிந்ததும் அதே பல்கலைக்கழகத்தில் பணி புரிய பணி நியமனம் வழங்கப்படும் எனவும் அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
உஷாவும் அவரது இரு மகள்களும் அமெரிக்காவிலேயே தொடர்ந்து வசிக்க முடிவு செய்துள்ளனர்.
நாங்கள் அமெரிக்கா செல்ல நிதியுதவி அளித்த முதல்வர் கருணாநிதியை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்கத் திட்டமிட்டுள்ளோம் என்றனர்.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக்












Click it and Unblock the Notifications