வீரப்பன் உளவாளி கொலை வழக்குநக்கீரன் கோபால் விடுதலை
கோபிச்செட்டிப்பாளையம்
வீரப்பனுக்கு உணவு உள்ளிட்டவற்றை சப்ளை செய்து வந்த ஹோட்டல் அதிபர் கந்தவேல் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த நக்கீரன் ஆசிரியர் கோபால், நிருபர்கள் சிவசுப்ரமணியம், ஜீவா தங்கவேல் உள்ளிட்ட 11 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
![]() |
ஈரோடு மாவட்டம் பர்கூரில் ஹோட்டல் வைத்திருந்தவர் கந்தவேல். இவர் வீரப்பனுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்டவற்றைக் கொடுத்து வந்தார். மேலும் வீரப்பனின் உளவாளியாகவும் இருந்தார்.
இவரை சிலர் கொலை செய்து விட்டனர். இதையடுத்து கடந்த அதிமுக ஆட்சியில் நக்கீரன் கோபால், நக்கீரன் நிருபர்கள் சிவசுப்ரமணியம், ஜீவா தங்கவேல் உள்ளிட்ட11 பேர் மீது கொலை வழக்கு போடப்பட்டது.
இந்த வழக்கு கோபிச்செட்டிப்பாளையம் விரைவு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. கோபால் உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டு சரிவர நிரூபிக்கப்படவில்லை என்பதால் அனைவரையும் விடுதலை செய்வதாக நீதிபதி பிரேம்குமார் தனது தீர்ப்பில் தெரிவித்தார்.
தீர்ப்பை அறிவதற்காக கோபி நீதிமன்றத்திற்கு வந்திருந்த கோபால் தீர்ப்பு குறித்து கூறுகையில், இது பொய் வழக்கு என்பது அனைவருக்கும் தெரியும். இந்த வழக்கால் நானும், எனது பத்திரிக்கை நிருபர்களும் கடந்த ஆட்சியில் அலைக்கழிக்கப்பட்டோம், துன்புறுத்தப்பட்டோம். இப்போது பெரும் சட்டப் போராட்டத்துக்குப் பின்னர் நிரபராதிகள் என நிரூபிக்கப்பட்டுள்ளோம் என்றார்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம்













Click it and Unblock the Notifications