ராமேஸ்வரம் கோவில் உண்டியல்கள் உடைப்பு!பல லட்சம் பணம், நகை திருட்டு
ராமேஸ்வரம்:ராமேஸ்வரத்தில் உள்ள புகழ் பெற்ற ராமநாதசுவாமி கோவிலில் உண்டியல்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள பணம் மற்றும் நகை ஆகியவை திருட்டு போயுள்ளன.
ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள். இந்தக் கோவிலின் சுவாமி சன்னதி, அம்மன் சன்னதி, காசிவிஸ்வநாதர் சன்னதி உள்ளிட்ட பல இடங்களில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன.
இதுதவிர தங்க, வெள்ளி காணிக்கைகாகவும் தனித் தனியாக உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டபோது, அங்கு வைக்கப்பட்டிருந்த ஆளுயர உண்டியலின் 3 பூட்டுக்களும் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் திருடப்பட்டது தெரிய வந்தது.
அதேபோல, நகை காணிக்கை உண்டியல்களும் உடைக்கப்பட்டு அதிலிருந்த நகைகளும் திருடப்பட்டிருந்தன. திருடப்பட்ட நகை, பணத்தின் மதிப்பு பல லட்சம் இருக்கலாம் என கருதப்படுகிறது.
ராமநாதசுவாமி கோவிலில் திருட்டு போவது இதுவே முதல் முறை என்பதால் பக்தர்கள் மத்தியில் பரபரப்பு நிலவுகிறது.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications