கத்தாராவை மிஞ்சிய ஆந்திர எம்.எல்.ஏகோர்ட்டில் சரண்-பரபரப்பு வாக்குமூலம்
ஹைதராபாத்:ஆள் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த தெலுங்கான ராஷ்டிரிய சமிதி கட்சி எம்.எல்.ஏ லிங்கையா நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். இந்த வழக்கில் முதலில் கைதான குஜராத் எம்.பி.பாபுபாய் கத்தாராவையே தூக்கி சாப்பிடும் வகையில் பலே மோசடிப் பேர்வழியாக லிங்கையா இருந்துள்ளது தெரிய வந்துள்ளது.
குஜராத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி.பாபுபாய் கத்தாரா, மனைவி, மகன் என்ற பெயரில் வேறு ஒரு பெண்ணையும், சிறுவனையும் கனடாவுக்கு அழைத்துச் செல்ல முயன்று சிக்கியுள்ளார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வந்தன. தெலுங்கான ராஷ்டிரிய சமிதிக் கட்சியைச் சேர்ந்த எம்.பிக்கள், எம்.எல்.ஏக்ளுக்கு இதில் பெரிய அளவில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து இந்த வழக்கில் தொடர்புடைய எம்.பி. நரேந்திராவை தெலுங்கானா கட்சி சஸ்பெண்ட் செய்தது. இந்த நிலையில் லிங்கையா என்ற எம்.எல்.ஏவும் இந்த வழக்கில் சிக்கினார்.
இவர் கத்தாராவையே மிஞ்சும் அளவுக்கு மிகப் பெரிய மோசடியைச் செய்துள்ளார். அதாவது தாரா என்பவரை தனது மனைவி என்று கூறி அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டு அதை வைத்து பாஸ்போர்ட்டும் எடுத்துள்ளார்.
இந்த தாரா குஜராத்தைச் சேர்ந்தவர். இந்தத் தகவல் வெளியானதைத் தொடர்ந்து லிங்கையா தலைமறைவாகி விட்டார். அவரை போலீஸார் தேடி வந்தனர். இந்த நிலையில் இன்று ஆந்திர மாநிலம் நாம்பள்ளி என்ற இடத்தில் உள்ள நீதிமன்றத்தில் லிங்கையா சரண் அடைந்தார்.
நீதிமன்றத்தில் லிங்கையா கொடுத்த வாக்குமூலத்தில், தெலுங்கான கட்சியைச் சேர்ந்த எம்.பி. நரேந்திராவின் தனி உதவியாளர்தான் ஆள் கடத்தும் கும்பலின் தரகரை தனக்கு அறிமுகம் செய்து வைத்ததாகவும், இந்த விவகாரத்தில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பல அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications