இன்று கிரிக்கெட் கிளைமாக்ஸ்-சாம்பியன் யார்?
பார்படோஸ்:9வது உலகக் கோப்பைக் கிரிக்கெட்டில் இன்று இறுதிப் போட்டி நடைபெறுகிறது. தொடர்ச்சியாக 3வது முறையாக கோப்பையை வெல்ல ஆஸ்திரேலியாவும், 2வது முறையாக சாம்பியன் ஆகும் வெறியில் இலங்கையும் இன்று கடும் போட்டிக்குத் தயாராகி வருகின்றன.
உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியின் உச்ச கட்டம் நெருங்கி விட்டது. ஆரம்பம் முதலே அதகளமாக வென்று வரும் ஆஸ்திரேலியாவும், சவால்களை சமாளித்து இலங்கையும் இறுதிப் போட்டிக்குள் வந்துள்ளன.
ஆஸ்திரேலியா அணி வலுவானதாக இருந்தாலும், இலங்கை அணியிலும் சில வெடிகுண்டுகள் இருப்பதால் போட்டியின் முடிவை படு சுவாரஸ்யமாக உலக கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.
மாத்யூ ஹைடன், மைக்கேல் கிளார்க், ரிக்கி பாண்டிங், மெக்கிராத், ஷான் டெய்ட் என ஆஸ்திரேலிய அட்டாக் படு அசத்தலாக உள்ளது. மறுபக்கம் இலங்கையில் முரளீதரன், மலிங்கா, ஜெயசூர்யா, வாஸ், சமரசில்வா, ஜெயவர்த்தனே என இலங்கையும் தெளிவாகவே உள்ளது.
![]() |
இரு அணிகளின் நோக்கமும் அசத்தல் வெற்றி என்பதால் ஆட்டம் படு காட்டமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
இரு அணிகள் குறித்த ஒரு அலசல் ...
தர வரிசையில் ஆஸ்திரேலியா முதலிடத்திலும், இலங்கை நான்காவது இடத்திலும் உள்ளன.
இரு அணிகளும் இதுவரை 63 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளன. அதில் ஆஸ்திரேலியாவுக்கு 42 வெற்றிகளும், இலங்கைக்கு 19 வெற்றிகளும் கிடைத்துள்ளன.
உலகக் கோப்பையில் இரு அணிகளும் 6 போட்டிகளில் சந்தித்துள்ளன. ஐந்தில் ஆஸ்திரேலியாவும், ஒன்றில் இலங்கையும் வென்றுள்ளன.
நடப்பு உலகக் கோப்பைப் போட்டியில் ஆஸ்திரேலியா லீக் சுற்றில், ஸ்காட்லாந்து, நெதர்லநாது, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளையும், சூப்பர் 8 சுற்றில், மேற்கு இந்தியத் தீவுகள், வங்கதேசம், இங்கிலாந்து, அயர்லாந்து, இலங்கை, நியூசிலாந்து, அரை இறுதியில் தென் ஆப்பிரிக்காவையும் வீழ்த்தி அட்டகாசமாக இறுதிக்குள் நுழைந்துள்ளது.
இலங்கை லீக் சுற்றில், பெர்முடா, வங்கதேசம், இந்தியாவையும், சூப்பர் எட்டு சுற்றில் மேற்கு இந்தியத் தீவுகள், இங்கிலாந்து, நியூசிலாந்து, அயர்லாந்து அணிகளை வீழ்த்தியும், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவிடம் தோற்றும், அரை இறுதியில், நியூசிலாந்தை வீழ்த்தியும் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.
2007- உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவின் டாப் ஸ்கோர்:
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட் இழப்புக்கு 377 ரன்கள் எடுத்ததே அதிகபட்ச ஸ்கோர்.
பெரிய அளவிலான வெற்றி - நெதர்லாந்தை 229 ரன்களில் வீழ்த்தியது.
வங்கதேசத்தை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
அதிக ரன்கள் எடுத்தவர் - மாத்யூ ஹைடன் (621).
அதிக விக்கெட்டுகள் - மெக்கிராத் (25).
இலங்கையின் டாப் ஸ்கோர்:
அதிகபட்ச டோட்டல் - பெர்முடாவுக்கு எதிராக 321 ரன்கள் எடுத்தது.
பெரிய வெற்றி - பெர்முடாவை 243 ரன்களில் வீழ்த்தியது.
அதிக ரன்கள் எடுத்தவர் - ஜெயவர்த்தனே (529).
அதிக விக்கெட்டுகள் - முத்தையா முரளீதரன் (23).
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு













Click it and Unblock the Notifications