தமிழகத்தில் மின்னல் தாக்கி 4 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:தமிழகத்தில் திருநெல்வேலி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில், நேற்று பெய்த பலத்த மழையின் போது மின்னல் தாக்கி 4 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து போலீஸார் தெரிவிக்கையில்,
தமிழகத்தில் நேற்று பெய்த பலத்த மழையினால், வெவ்வேறு இடங்களில் 4 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்தனர்.
விருதுநகரில், நிலத்தில் வேலை செய்துக் கொண்டிருந்த பாப்பா(45), திருநெல்வேலியை சேர்ந்த பிச்சை வேல்(70), காட்டான்குளத்தை சேர்ந்த இசக்(35), திருவிடநல்லூரை சேர்ந்த தன்னையராம்(26) ஆகியோர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர்.
இதில் பாப்பா, பிச்சைவேல் நிலத்தில் வேலை செய்துக் கொண்டிருந்தபோது மின்னல் தாக்கி இறந்தனர்.
தன்னையராம், ஐசக் இருவரும் கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்த போது மின்னல் தாக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications