மே 4ம் தேதி அக்னி நட்சத்திரம் ஆரம்பம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:மே மாதம் 4ம் தேதி முதல் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலம் ஆரம்பிக்கிறது.
கோடை வெப்பத்தில் தமிழகம் கதகதத்துக் கொண்டுள்ளது. வேலூரில் தான் வழக்கம்போல் அதிகபட்சமான வெப்ப நிலை பதிவாகி வருகிறது. இங்கு நேற்று 104 டிகிரி வெப்பம் பதிவானது.
சென்னையிலும் வெப்பத்தின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. வெப்பத்தை தணிக்க பழக் கடைகளிலும், குளிர்பான கடைகளிலும் மக்கள் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.
தென் மாவட்டங்களில் ஆங்காங்கே கோடை மழை பெய்து சிறிது வெப்பத்தை தணித்துள்ளது.
இந்நிலையில் அக்னி வெயில் எனப்படும் கத்திரி மே மாதம் 4ம் தேதி ஆரம்பித்து 29ம் தேதி வரை நீடிக்கிறது. இந்த நாட்களில் கடும் வெப்பத்தை நாம் சந்திக்க வேண்டியிருக்கும்.












Click it and Unblock the Notifications