அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு;3 பேர் சாவு-மர்ம நபர் சுட்டுக் கொலை!
கான்சாஸ் சிட்டி:அமெரிக்காவின் கான்சாஸ் சிட்டி நகரில் ஒரு மர்ம நபர் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 3 பேர் இறந்தனர். கடைசியில் அந்த நபரை போலீஸார் சுட்டுக் கொன்றனர்.
விர்ஜீனியா டெக் பல்கலைக்கழகத்தில் நடந்த வெறித்னமான துப்பாக்கிச் சூடு சம்பவமே இன்னும் உலக மக்களின் நினைவிலிருந்து மறையவில்லை. இந்த நிலையில் அதேபோன்ற ஒரு சம்பவம், கான்சாஸ் சிட்டி நகரில் உள்ள வணிக வளாகத்தின் கார் பார்க்கிங்கில் நடந்துள்ளது. இதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
![]() |
இதுகுறித்து கான்சாஸ் சிட்டி காவல் அதிகாரி டோனி சாண்டர்ஸ் கூறுகையில், ஒரு மர்ம நபர் நேற்று இரவு கான்சாஸ் சிட்டியில் உள்ள முக்கிய வணிக வளாகத்திற்கு வந்தார்.
நூற்றுக்கணக்கான மக்கள் அப்போது அந்த வளாகத்தில் இருந்தனர்.
காரை பார்க்கிங்கில் நிறுத்திய அந்த நபர் திடீரென தனது கைத்துப்பாக்கியால் தனக்கு அருகில் இருந்த இருவரை சுட்டுக் கொன்றார்.
![]() |
பின்னர் உள்ளே நுழைந்த அந்த நபர் 2 பேரை காயப்படுத்தினார். ஞாயிற்றுக்கிழமை என்பதால் மிகப் பெரிய அளவில் கூட்டம் காணப்பட்டது. துப்பாக்கிச் சூடு சம்பவத்தையடுத்து அங்கு பெரும் குழப்பமும், பீதியும் ஏற்பட்டது.
அனைவரும் வணிக வளாகத்தை விட்டு தப்பி ஓட முயன்றதால் பெரும் கூட்ட நெரிசலும் ஏற்பட்டது. உடனடியாக போலீஸார் அங்கு விரைந்து வந்தனர். அங்கு துப்பாக்கியுடன் நின்று கொண்டிருந்த அந்த நபரை போலீஸார் சுட்டுக் கொன்றனர்.
இந்த நபர், வணிக வளாகத்திற்குள் வெறித்தனம் செய்வதற்கு முன்பு அருகில் இருந்த ஒரு வீட்டில் இருந்த ஒருவரை சுட்டுக் கொன்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
இந்த சம்பவத்தால் சுமார் கால் மணி நேரம் அந்த வணிக வளாகத்தில் பெரும் பீதி காணப்பட்டது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்














Click it and Unblock the Notifications