சென்னை நிலையத்திற்கு மனித வெடிகுண்டு மிரட்டல்
சென்னை:சென்னை விமான நிலையத்திற்கு மனித வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கர்நாடக மாநிலம் மங்களூர் விமான நிலையக் கட்டுப்பாட்டு அறைக்கு இன்று காலை ஒரு போன் அழைப்பு வந்தது. அந்த அழைப்பை எடுத்து சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் பேசியுள்ளார்.
அதில் பேசிய நபர், தோஹாவிலிருந்து சென்னைக்கு வரும் கத்தார் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஒரு மனித வெடிகுண்டு பயணிப்பதாகவும், விமான நிலையத்திற்கு வந்ததும் அந்த மனித வெடிகுண்டு வெடிக்கும் எனவும் மறு முனையில் பேசியவர் கூறியுள்ளார்.
இதையடுத்து இத்தகவலை கர்நாடக டிஜிபிக்கு அந்த சப் இன்ஸ்பெக்டர் தெரிவித்தார். அவர் தமிழக டிஜிபிக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அண்ணா பன்னாட்டு முனையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
விமான நிலையத்தில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு டிஜிபி முகர்ஜி உத்தரவிட்டார். இதையடுத்து பாதுகாப்புப் படையினர் உஷார்படுத்தப்பட்டனர். தோஹாவிலிருந்து 177 பயணிகளுடன் அந்த விமானம் தரையிறங்கிதும், பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தப்பட்டது.
ஆனால் இந்த சோதனையில் வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை. விமானத்தில் குண்டுகள் எதுவும் கிடைக்கவில்லை. இதையடுத்து பயமிகள் அனைவரையும் இறக்கிய பின்னர் விமானம் முழுவதும் முழுமையாக ேசாதனையிடப்பட்டது. ஆனால் குண்டு எதுவும் சிக்கவில்லை.
இதையடுத்து அத்தகவல் வெறும் வதந்தி எனத் தெரிய வந்தது. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தோஹாவுக்கு செல்லவிருந்த 134 பயணிகளின் உடமைகளும் தீவிரமாக சோதனை இடப்பட்டு அதன் பின்னரே அவர்கள் விமானத்தில் ஏற அனுமதிக்கப்பட்டனர்.
இந்த குழப்பம் காரணமாக சுமார் 1 மணி ேநர தாமதத்திற்குப் பின்னர் தோஹா செல்ல வேண்டிய விமானம் கிளம்பிச் ெசன்றது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications