அரவாணிகளின் அழகு ராணி கோவை பத்மினி
விழுப்புரம்:விழுப்புரம் மாவட்டம் கூவாகத்தில் நடந்த அரவாணிகளுக்கான அழகு ராணிப் போட்டியில் கோவையைச் சேர்ந்த அரவாணி பத்மினி அழகு ராணியாக தேர்வு செய்யப்பட்டார்.
![]() |
கூவாகம் கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவிலில், ஆண்டுதோறும் சித்திரைப் பெருவிழாவை அரவாணிகள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டு திருவிழாவும் கோலாகலமாக நடந்து வருகிறது.
இதற்காக நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பெரும் திரளான அரவாணிகள் கூவாகத்தில் குவிந்துள்ளனர். இன்று மாலை 4 மணிக்கு அரவாணிகளுக்கு தாலி கட்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
கூவாகத்திற்கு வந்துள்ள அரவாணிகளுக்காக விழுப்புரத்தில் பல்வேறு நிகழ்ச்சிளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அரவாணிகள் கலந்து கொண்ட ஊர்வலமும் நடந்தது.
![]() |
விழுப்புரம் பேருந்து நிலையத்திலிருந்து கிளம்பிய ஊர்வலம், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்குச் சென்று முடிவடைந்தது. பின்னர் ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
பின்னர் இந்திய அளவில் சிறந்த அரவாணி அழகு ராணியைத் தேர்ந்தெடுப்பதற்கான போட்டி நடத்தப்பட்டது. இதில் பல அரவாணிகள் கலந்து கொண்டு கேட் வாக் செய்தனர். தமிழக அரவாணிகள் தவிர மும்பை, பெங்களூர், ஆந்திரா, கேரளா ஆகிய இடங்களிலிருந்தும் நிறைய அரவாணிகள் கலந்து கொண்டனர்.
விதம் விதமான டிரஸ்களில் வந்து கலக்கிய அரவாணிகள் நடனமும் ஆடி அசத்தினர். பின்னர் கோவையைச் சேர்ந்த பத்மினி என்ற அரவாணி அழகு ராணியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஈரோடு கார்த்திக் பிரியா 2வது இடத்தையும், சுபிக்ஷா 3வது இடத்தையும் பெற்றனர்.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்














Click it and Unblock the Notifications