ரேட்டிங்-இந்தியா, பாகிஸ்தானை பின் தள்ளிய வங்கதேசம்
டெல்லி:உலகக் கோப்பைக் கிரிக்கெட்டில் படு கேவலமாக தோற்று வெளியேறியதால் ஒரு நாள் ரேட்டிங்கில் இந்தியா, பாகிஸ்தானை பின்னுக்குத் தள்ளி விட்டு 7வது இடத்துக்கு முன்னேறியுள்ளது வங்கதேசம்.
ஈ.எஸ்.பி.என். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஒரு நாள் போட்டிகளுக்கான மாருதி சுசுகி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் பாகிஸ்தானுக்கு 8வது இடமும், இந்தியாவுக்கு 9வது இடமும் கிடைத்துள்ளன. இந்தியாவுக்கு அடுத்த இடத்தில் கென்யா உள்ளது. இந்தியாவை புரட்டி எடுத்த வங்கதேச அணிக்கோ 7வது இடம் கிடைத்துள்ளது.
உலகக் கோப்பை போட்டியின் லீக் சுற்றில் பெர்முடாவை மட்டும் இந்தியா தோற்கடித்தது. வங்கதேசம், இலங்கையிடம் தோல்வியைத் தழுவியது.
பேட்டிங் வரிசையில், ஆஸ்திரேலியாவின் மாத்யூ ஹைடன் முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் கல்லிஸ் உள்ளார். ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் 3வது இடத்தில் இருக்கிறார்.
பந்து வீச்சு மற்றும் பவுலிங்கில் இந்தியாவுக்கு ஒரு இடமும் கிடைக்கவில்லை.
அணிகளின் தர வரிசை:
1. ஆஸ்திரேலியா, 2. தென் ஆப்பிரிக்கா, 3. இலங்கை, 4. நியூசிலாந்து, 5. இங்கிலாந்து, 6. மேற்கு இந்தியத் தீவுகள், 7. வங்கதேசம், 8. பாகிஸ்தான், 9. இந்தியா, 10. கென்யா.
பேட்டிங் தர வரிசை:
1. மாத்யூ ஹைடன், 2. ஜேக்கஸ் கல்லிஸ், 3. ரிக்கி பாண்டிங், 4. கெவின் பீட்டர்சன், 5. ஆப்ரகாம் டி வில்லியர்ஸ், 6. சந்தர்பால், 7. ஜெயவர்த்தனே, 8. ஸ்காட் ஸ்டைரிஸ், 9. மைக்கேல் கிளார்க், 10. சனத் ஜெயசூர்யா.
பந்து வீச்சாளர்கள் தர வரிசை:
1. மெக்கிராத், 2. முரளீதரன், 3. நாதன் பிரேக்கன், 4. ஷேன் பாண்ட், 5. ஷான் போலாக், 6. ஆண்ட்ரூ ஹால், 7. லசித் மலிங்கா, 8. சமிந்தா வாஸ், 9. மஷரேப் மொர்டசா, 10. ஷான் டெய்ட்
-
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications