காவிரி: தமிழக, கர்நாடக மனுக்கள்விரைவில் நடுவர் மன்றத்தில் விசாரணை
Subscribe to Oneindia Tamil
டெல்லிதமிழகம் மற்றும் கர்நாடக அரசுகள் தாக்கல் செய்துள்ள மனுக்கள் மீது விரைவில் காவிரி நடுவர் மன்றம் விசாரணை நடத்தும் எனத் தெரிகிறது.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழக, கர்நாடக அரசுகள் நடுவர் மன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன. இதில் கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்திலும் ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் 5ம் தேதி நடுவர் மன்றத் தீர்ப்பு வெளியானது. தீர்ப்பில் அதிருப்தி ஏற்பட்டால், மேல் முறையீடு செய்யவும், விளக்கம் கோரி மனு தாக்கல் செய்யவும் இன்றுதான் கடைசி நாள்.
எனவே இரு மாநில அரசுகளும் மனு தாக்கல் செய்துள்ள நிலையில், விரைவில் இந்த மனுக்களை நடுவர் மன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications