சட்டசபையை கலக்கிய கொடநாடு எஸ்டேட்!!
சென்னை:சட்டசபையில், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் குறித்து அமளி ஏற்பட்டது.
சட்டசபையில் இன்று சுற்றுலா மற்றும் செய்தித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. அதில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் உறுப்பினர் கோபாலன், நீலகிரி மாவட்டம் தேயிலைத் தொழிலையே நம்பியுள்ளது. கடந்த ஆண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தை சிலர் வாங்கியிருக்கிறார்கள் என்றார்.
அப்போது அதிமுகவினர் மொத்தமாக எழுந்து அதற்கு ஆட்சேபனை தெரிவித்தனர். பதிலுக்கு காங்கிரஸாரும் எழுந்து கோஷம் போட்டனர். இதனால் அவையில் அமளி நிலவியது.
அதிமுக கொறடா கே.ஏ.செங்கோட்டையன் எழுந்து, கொட நாடு பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை சிலர் வாங்கியிருப்பதாக உறுப்பினர் கூறுகிறார். அதை அவரால் நிரூபிக்க முடியுமா என்றார்.
தொடர்ந்து பேசிய செங்கோட்டையன், கோபாலன் பல கட்சிகளில் இருந்தவர் என்று பேசினார். ஆனால், அவர் பேசியதை சபாநாயகர் அவைக் குறிப்பில் இருந்து நீக்கினார்.
தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் சுதர்சனம் பேசுகையில், கோபாலன் கட்சி மாறி வந்ததாக கூறுகிறார் செங்கோட்டையன். ஆனால் ஐஎன்டியூசியைச் சேர்ந்த சின்னச்சாமியை அவர்கள் கட்சியில் வைத்துள்ளனர் என்றார்.
அப்போது குறுக்கிட்ட அமைச்சர் ராமச்சந்திரன், கொடநாடு பகுதியில் ஜெயலலிதாவும், சசிசகலாவும் சேர்ந்து எஸ்டேட் வாங்கியுள்ளது முறைப்படி பதிவாகியுள்ளது. இப்போது அங்குதான் எதிர்க்கட்சித் தலைவர் ஓய்வெடுத்து வருகிறார் என்றார்.
இதற்கு அதிமுகவினர் மறுபடியும் எழுந்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மீண்டும் அமளி நிலவியது.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications