கருணாநிதி பொன்விழா செலவுதிமுகவே ஏற்கும்-ஆற்காடு வீராசாமி
சென்னை:முதல்வர் கருணாநிதியின் சட்டசபை பொன்விழா நிகழ்ச்சிக்கான செலவுகளை திமுக மற்றும் தோழமைக் கட்சிகளே ஏற்கும் என திமுக பொருளாளரும், மின்துறை அமைச்சருமான ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், முதல்வர் கருணாநிதியின் சட்டசபை பொன்விழா தொடர்பான நிகழ்ச்சிகளுக்கான செலவுகளை திமுகவும், தோழமைக் கட்சிகளும் ஏற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படியே நிகழ்ச்சி ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
அதேபோல பேரவையில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கான செலவுகளையும் திமுக மற்றும் தோழமைக் கட்சிகளே ஏற்கின்றன என்று கூறியுள்ளார்.
ஆற்காடு வீராசாமி வெளியிட்டுள்ள இன்னொரு அறிக்கையில், ஊழல் வழக்குகளை சந்திக்கொண்டிருக்கிற ஜெயலலிதாவுக்குப் பிறர் பற்றி பேசவோ, எழுதவோ தகுதியில்லை.
கருணாநிதி குடும்பம் 2 விமானங்களை வாங்கியிருப்பதாக ஜெயலலிதா கூறியுள்ளார். விமானங்களை வாங்கியிருப்பது ஒரு தனியார் நிறவனம். அந்த நிறுவனத்திற்கும் முதல்வர் கருணாநிதிக்கும் எந்த தொடர்பும் இல்லை.
அரசியல் ரீதியாக அவர் மீது எந்த குற்றமும் சொல்ல முடியாததாலும், தனியார் நிறுவனத்தின் மீது பொறாமை கொண்டும் அறிக்கை விடுவது ஏன்.
உங்களிடம் பணியாற்றிய அதிகாரி திருமண வரவேற்பிற்கு கோடநாடு எஸ்டேட்டில் இருந்து சென்னைக்கு தனி விமானத்தில் வந்துவிட்டு சென்ற செலவு ரூ.60 லட்சம். இந்த பணம் எங்கிருந்து வந்தது.
எண்ணற்ற ஊழல் வழக்குகளை சந்தித்து கொண்டிருக்கிற அவருக்கு பிறறை பற்றி பேசவோ, எழுதவோ அல்லது பிறர் எழுதிகொடுத்த அறிக்கையில் கையெழுத்திடவோ எந்த நியாமும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார் ஆற்காடு வீராசாமி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications