34 நிறுவனங்களுக்கு ஜெ., சசிகலா ஓனர்: திமுக பதிலடி
சென்னை: அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதாவும், அவருடைய தோழி சசிகலாவும் சேர்ந்து 34 நிறுவனங்கள் நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் முதல்வர் கருணாநிதியையும் அவரது குடும்பத்துக்கு சொத்துக்களையும் குறிப்பிட்டு ஜெயலலிதா ஒரு அறிக்கை விட்டார். அதில், சன் டிவி சார்பில் 2 விமானங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கருணாநிதிக்கு இவ்வளவு பணம் வந்தது எப்படி என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந் நிலையில் திமுக தரப்பில் இருந்து பதிலடி வந்துள்ளது. ஜெயலலிதா-சசிகலாவின் சொத்துக்கள் என்ற பெயரில் தினகரன் நாளிதழ் பட்டியல் வெளியிட்டுள்ளது.
இதில் ஜெயா டிவி, ஆந்திராவில் உள்ள திராட்சைத் தோட்டம், ஊட்டி தேயிலைத் தோட்டம் ஆகியவை அனைவரும் அறிந்த சில சொத்துக்கள்.
ஜெயலலிதா, சசிகலாவுக்குச் சொந்தமானதாக தினகரன் நாளிதழ் வெளியிட்டுள்ள பட்டியல் விவரம்:
1. ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ், சென்னை
2. ஜே. பார்ம் ஹவுசஸ், சென்னை
3. ஜெயா கான்ட்ராக்டர் அண்ட் பில்டர்ஸ், சென்னை
4. கிரீன் பார்ம் ஹவுசஸ், சென்னை
5. ஜே.ஜே லீசிங், சென்னை
6. ஜே.எஸ். ஹவுசிங் டெவலப்மெண்ட், சென்னை
7. ஏபி அட்வர்டைசிங், சென்னை
8. ஃபிரஷ் மஷ்ரூம்ஸ், சென்னை
9. ரிவர்வே அக்ரோ ப்ரோடக்ஷன், நீலாங்கரை
10. சூப்பர் டூப்பர் டி.வி, சென்னை
11. லெக்ஸ் பிராப்பர்டி டெவலப்மெண்ட், சென்னை
12. மாஸ்டர் ஜே விவேக்ஸ், போயஸ் கார்டன், சென்னை
13. மெடோ அக்ரோ பார்ம்ஸ் சென்னை
14. சினோரா பிசினஸ் என்டர்பிரைசஸ், சென்னை
15. ராம்ராஜ் அக்ரோ மில்ஸ், சென்னை
16. விக்னேஸ்வரா பில்டர்ஸ், சென்னை
17. லட்சுமி கன்ஸ்ட்ரக்ஷன், சென்னை
18. கோபால் ப்ரமோட்டர்ஸ், சென்னை
19, சக்தி கன்ட்ஸ்ரக்ஷன்ஸ், சென்னை
20. நமச்சிவாயா ஹவுஸ்சிங், சென்னை
21. அய்யப்பா பிராப்பர்டி டெவலப்மெண்ட், சென்னை
22. ஸீ என்கிளேவ், சென்னை
23. நவசக்தி கான்ட்ராக்டர்ஸ் அண்ட் பில்டர்ஸ், சென்னை
24. ஓசியாணிக் கன்ஸ்டரக்ஷன், சென்னை
25. ஜே ரியல் எஸ்டேட், சென்னை
26. கிரீன் கார்டன் அபார்மெண்ட், சென்னை
27 கொடநாடு டீ எஸ்டேட், உதகை
28. மார்பிள் அண்ட் மார்வெல்ஸ், சென்னை
29. பேக்ஸ் யுனிவர்சல், சென்னை
30. வினோத் வீடியோ விஷன் சென்னை
31. இண்டோ டோஹா கெமிக்கல்ஸ் அண்ட் பார்ம்சுடிக்கல்ஸ், சென்னை
32. மெட்டல் கிங், சென்னை
33. ஜெயா பப்ளிகேஷன்ஸ், சென்னை
34. சசி எண்டர்பிரைசஸ், சென்னை












Click it and Unblock the Notifications