தயாநிதி மாறன் பெஸ்ட், சிதம்பரம் நெக்ஸ்ட்!
சென்னை:தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களிலேயே தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தயாநிதி மாறன் தான் சிறந்தவர் என்று ஏசி நீல்சன் அமைப்பு நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.
மக்கள் மனசு என்ற பெயரில் சன் டிவியுடன் இணைந்து ஏசி நீல்சன் அமைப்பு கருத்துக் கணிப்பை நடத்தி வருகிறது.
அதில் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களிலேயே சிறப்பாக செயல்படுவர் யார் என்ற கேள்வியை முன் வைத்து கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.
இதில் தயாநிதி மாறனுக்கே அதிக வாக்குகள் கிடைத்துள்ளன. தமிழக அளவில் அவர்தான் சிறந்த அமைச்சர் என்று 64 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
2வது இடம் ப.சிதம்பரத்திற்குக் கிடைத்துள்ளது. அவருக்கான ஆதரவு 27 சதவீதமாகும்.
டி.ஆர்.பாலுவுக்கு 7 சதவீத ஆதரவும், அன்புமணிக்கு 1 சதவீத ஆதரவும் உள்ளது.
வேறு அமைச்சர்கள் யாரையும் சிறந்த அமைச்சர்களாக கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்கள் தனியாக குறிப்பிட்டுச் சொல்லவில்லை. மற்ற அமைச்சர்களுக்கு ஒட்டுமொத்தமாக சதவீத ஆதரவே கிடைத்துள்ளது.
தயாநிதி மாறனுக்கு வேலூர் மாவட்டத்தில் நல்ல ஆதரவு காணப்படுகிறது. அங்கு மட்டும் 79 சதவீதம் பேர் தயாநிதியை சிறந்த அமைச்சராக கூறியுள்ளனர்.
சேலம், கோவையில் 73 சதவீத ஆதரவு காணப்படுகிறது. சென்னையில் ஆதரவு குறைவுதான். 61 சதவீதம் பேரே தயாநிதியை ஆதரித்துள்ளனர்.
புதுச்சேரியில் 67 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். திருச்சி, மதுரை, நெல்லை, நாகர்கோவில் ஆகிய பகுதிகளிலும் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் தயாநிதி மாறனை ஆதரித்துள்ளனர்.
2வது இடத்தைப் பிடித்துள்ள ப.சிதம்பரத்துக்கு அதிகபட்சமாக மதுரையில் 36 சதவீதம் பேரும், சென்னையில் 24 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
சேது சமுத்திரத் திட்டம், தமிழகத்தில் பாலங்கள் கட்டுவது போன்றவற்றில் தீவிரம் காட்டுவதால் டி.ஆர்.பாலுவுக்கும் கணிசமான ஆதரவு கிடைத்துள்ளது. திருச்சி, நாகர்கோவிலில் 12 சதவீதம் பேர் பாலுவை ஆதரித்துள்ளனர். சென்னையில் கிடைத்துள்ள ஆதரவு 11 சதவீதமாகும்.
அன்புமணிக்கு புதுவையில்தான் ஓரளவு ஆதரவு கிடைத்துள்ளது. அதாவது 4 சதவீதம் பேர் அன்புணி பெஸ்ட் எனக் கூறியுள்ளனர். சென்னையில் 2 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மதுரை, சேலம், கோவையில் யாரும் அன்புமணிக்கு ஆதரவாக கருத்து கொண்டிருக்கவில்லை (மதுரையைத் தாண்டி அன்புமணி எந்த ஊருக்கும் அதிகம் போனதே இல்லையே)
தயாநிதி மாறன் நம்பர் ஒன் இடம் பிடித்திருப்பதற்கு முக்கியக் காரணமாக ஒரு ரூபாயில் நாடு முழுவதும் போனில் பேசும் வசதி,
பல பன்னாட்டுத் தொலைத் தொடர்பு, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை தமிழகத்திற்குக் கொண்டு வந்தது ஆகியவற்றைக் காரணமாக கூறியுள்ளனர் மக்கள்.
இளமைத் துடிப்புடன் அவர் பணியாற்றுவதாகவும் பலர் குறிப்பிட்டுள்ளனர்.
வீட்டில் யாரால் தொல்லை:
அடுத்த கருத்துக் கணிப்பு, வீட்டில் அதிகம் தொல்லை தருவது மகனா, மகளா, வாழ்க்கைத் துணையா, பெற்றோரா, உடன்பிறப்பா என்பது.
ஆனால் இவர்களில் யாரும் இல்லை என்பதுதான் இந்த கருத்துக் கணிப்பின் முடிவாக வந்துள்ளது. அதாவது 46 சதவீதம் பேர் இவர்கள் யாரும் இல்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
கணவன் அல்லது மனைவியால் தான் டென்ஷன் என கூறியிருப்பவர்கள் 26 சதவீதம் பேர். மகனால் டென்ஷன் என 17 சதவீதம் பேரும், மகளால் தொல்லை என 11 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
சென்னை நகரில்தான் மகன்கள் மீது பெற்றோர்கள் அதிகம் கடுப்பாக உள்ளனர். அதாவது 23 சதவீதம் பேர் மகன்களால்தான் தொல்லை அதிகம் என்று கூறியுள்ளனர் (பிள்ளை பிடிக்கும் வேலையிலும், எஸ்.எம்.எஸ். அனுப்புவதிலும் குறியாக இருப்பதை விட்டால் இந்த நிலை மாறலாம்!)
உடன்பிறப்புகளால் தொல்லை அதிகம் என்று கூறியுள்ளவர்கள் 6 சதவீதம் பேர். பெற்றோர்கள் காரணம் என கூறியிருப்பவர்கள் 4 சதவீதம் பேர். ஒரு சதவீதம் பேர் கருத்து தெரிவிக்கவில்லை.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு!












Click it and Unblock the Notifications