குஷ்புவை புறக்கணித்த பாமக எம்எல்ஏக்கள்
சென்னை:மணியம்மையாக நடிகை குஷ்பு நடித்ததற்காக பெரியார் படத்தை பாமக எம்எல்ஏக்கள் புறக்கணித்தனர்.
திருமணத்திற்கு முன்பு பெண்கள் உடலுறவு வைத்துக்கொள்வது தவறில்லை என கருத்து தெரிவித்த குஷ்புவைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பேராட்டங்கள் நடந்தன.
இந்நிலையில் பெரியாரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் மணியம்மையாக நடிக்க குஷ்புவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதற்கு பாமகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் மணியம்மை வேடத்தில் குஷ்பு நடிக்க கூடாது எனவும் வலியுறுத்தினர்.
ஆனால் இதையெல்லாம் கடந்து மணியம்மையாக குஷ்பு நடித்தார். பெரியார் படம் தற்போது வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன் தமிழக எம்எல்ஏக்களுக்காக பெரியார் படம் சிறப்பு காட்சியாக திரையிடப்பட்டது. முதல்வர் கருணாநிதி, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் இப்படத்தை பார்த்தனர். ஆனால் பாமக எம்எல்ஏக்கள் மட்டும் வரவில்லை.
குஷ்பு நடித்ததை எதிர்க்கும் வகையில் பெரியார் படத்தை அவர்கள் புறக்கணித்தாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து பாமகவினரிடம் கேட்டபோது, பெரியார் படம் திரையிட்ட அதே நாளில் மத்திய அமைச்சர் அன்புமணி பங்கேற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டதாகவும் அதனால் படம் பார்க்க செல்ல இயலவில்லை என்றனர்.
ஆனால் குஷ்பு மீதான கோபமே இந்த புறக்கணிப்புக்கு காரணம் என கூறப்படுகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications