திருக்கோவிலூர்: திருவிழாவில் ஜாதி கலவரம்போலீஸ் தடியடி- கண்ணீர் புகை குண்டு வீச்சு
திருக்கோவிலூர்:திருக்கோவிலூர் அருகே நடந்த தேர்த் திருவிழாவில் இரு தரப்பினரிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தியதோடு கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை விரட்டியடித்தனர்.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரை அடுத்த குலதீபமங்கல் கிராமத்தில் திரிவுபதியம்மன் கோவில் தேர்த் திருவிழா நடைபெற்றது. தேர் புறப்பட்டபோது தேருக்கு மாலை அணிவிப்பதற்காக தலித் தரப்பைச் சேர்ந்தவர்கள் மேள தாளங்களுடன் வந்தனர்.
அங்கு இன்னொரு ஜாதியினர் அவர்களை தடுத்து நிறுத்தி கோவிலுக்குள் செல்ல அனுமதிக்க மறுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த தலித் தரப்பை சேர்ந்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த வாக்குவாதம் மோதலாக மாறியது. இரு தரப்பினரும் கடுமையாக மோதிக் கொண்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் அங்கு விரைந்து வந்து இரு தரப்பினரையும் சமதானப்படுத்தினர். ஆனால் இரு தரப்பினரும் மீண்டும் மோதலில் ஈடுபட்டனர். அடிதடியும் நடந்தது.
இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டு வீசியும் அவர்களை விரட்டியடித்தனர்.
இந்த மோதலில் பலர் காயமடைந்தனர். அவர் அனைவரும் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications