பீச் ரோட்டில் பைக் ரேஸ்: 2 பேர் கைது
சென்னை:போக்குவரத்து நெரிசல் மிக்க கடற்கரை காமராஜர் சாலையில், பந்தயம் கட்டி படு வேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற இரு வாலிபர்களைப் போலீஸார் மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.
சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில், 4 மோட்டார் சைக்கிள்களில் 8 பேர் பந்தயம் கட்டி படு வேகமாக, படு சத்தத்தோடு பைக்குகளை ஓட்டிச் செல்வதாக போலீஸாருக்குத் தகவல் வந்தது.
![]() |
இதையடுத்து போலீஸார் அங்கு விரைந்தனர். ஆனால் அந்த பைக் பார்ட்டிகள் அதற்குள் எலியட்ஸ் கடற்கரையை விட்டு மெரீனா கடற்கரை உள்ள காமராஜர் சாலைக்குப் பறந்து விட்டனர்.
இதையடுத்து மெரீனா கடற்கரை போலீஸார் உஷார்படுத்தப்பட்டனர். போலீஸார் அதி வேகமாக பைக்குகளில் வந்தவர்களை உழைப்பாளர் சிலை அருகே மடக்கினர். இதில் சுகுமார், சுதாகர் ஆகிய இருவர் மட்டும் சிக்கிக் கொண்டனர்.
வண்டியை போலீஸார் நிறுத்த முயன்றபோது அவர்களை இடித்துத் தள்ளி விட்ட தப்ப சுகுமார் முயன்றுள்ளார். இருப்பினும் போலீஸார் லாவகமாக அவரையும், சுதாகரையும் மடக்கிப் பிடித்தனர்.
எலியட்ஸ் முதல் மெரீனா வரை பந்தயம் கட்டி யார் முதலில் செல்வது என்று நண்பர்களுக்குள் போட்டியாம். படு சத்தத்தோடு, பொதுமக்களை அலற வைக்கும் வகையில் இவர்கள் 8 பேரும் பைக்குகளை ஓட்டிச் சென்றுள்ளனர்.
பிடிபட்ட 2 பேர் மீதும் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவரும் கைது செயய்ப்பட்டனர். தப்பி ஓடி விட்ட மற்ற 6 பேரையும் பிடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!













Click it and Unblock the Notifications