மும்பை குண்டு வெடிப்பு: 23 பேர் விடுதலை
மும்பை: மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் 23 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.
மும்பையில் கடந்த 1993ம் ஆண்டு தொடர் குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்தது. இதில், 257 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் தாவூத் இப்ராகிம், நடிகர் சஞ்சய் தத் உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டது.
இதில் 123 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் சிலர் மீது குண்டு வைத்ததாகவும், சிலர் மீது சதி திட்டம் தீட்டியதாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
வழக்கு விசாரணை 14 ஆண்டுகளாக மும்பை தடா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவர்களுக்கு மரணதண்டனை வழங்க வேண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்திருந்தார்.
சமீபத்தில், 123 பேரில் 100 பேர் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பளித்தார். தண்டனை விவரம் பின்னர் தெரிவிக்கப்படும் எனவும் அறிவித்திருந்தார்.
குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டவர்களில் டைகர் மேமனின் சகோதரர் உள்பட 47 பேர் மீது கடுமையாக குற்றசாட்டுகள் கூறப்பட்டுள்ளது. நடிகர் சஞ்சய் தத் உள்பட மற்றவர்கள் சாதாரண குற்றவாளியாக அறிவிக்கப்பட்டனர்.
இவர்களுக்கு என்ன தண்டனை என்ற விவரத்தை இன்று அறிவிப்பதாக நீதிபதி தெரிவித்திருந்தார். அதன்படி 123 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகும்டி சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
இதையடுத்து 3 பேர் தவிர அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்கள். இதையடுத்து 23 பேரை வழக்கிலிருந்து விடுதலை செய்து நீதிபதி இன்று அறிவித்தார். மற்றவர்களுக்கான தண்டனை விவரம் படிப்படியாக அறிவிக்கப்படும்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications