சந்தன கடத்தலில் வீரபாண்டி குடும்பம்:ஜெ புகார்-வனத்துறை அமைச்சர் மறுப்பு
சென்னை:வேளாண்மைத் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் குடும்பத்தினர் சந்தன கடத்தலில் ஈடுபட்டிருப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியிருப்பதை தமிழக வனத்துறை அமைச்சர் செல்வராஜ் வன்மையாக மறுத்துள்ளார்.
செல்வராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஆற்காடு பகுதியில் உள்ள வசம்பாடி என்ற இடத்தில் உள்ள தனியார் எஸ்டேட்டில் இந்த சந்தன கடத்தல் நடந்தது.
இந்த எஸ்டேட்டின் உரிமையாளர்களிடையே 1995ம் ஆண்டு பிரச்சனை எழுந்த போது அைதத் தீர்க்க நீதிமன்றம் இருவரை பார்வையாளர்களாக நியமித்தது.
கடந்த ஏப்ரல் மாதம் 10ம் தேதி வனத்துறையினர், காவல்துறையினருடன் இணைந்து ஆற்காடு எஸ்டேட்டிலிருந்து லாரியில் கடத்த முயன்ற 5,560 கிலோ சந்தன கட்டைகளை கைப்பற்றினர்.
இதையடுத்து எஸ்டேட் மேலாளர் ஜெயம்கொண்டான் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து இது தொடர்பாக 34 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நீதிமன்ற உத்தரவின்படி, பறிமுதல் செய்யப்பட்ட சந்தன கட்டைகளை வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, அஸ்தம்பாடி குடோனில் வைக்கப்பட்டது.இது வழக்கு குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இது சம்பவம் தனியாருக்கு சொந்தமான எஸ்டேட் பகுதியில் நடந்தது. வனப்பகுதியில் அல்ல. கடந்த அதிமுக ஆட்சியிலும் இதே எஸ்டேட்டில் இருந்து சந்தன கட்டைகள் கடத்தப்பட்டன.
அப்போது அதிமுக அரசு கையாண்ட முறைகளை தான் இந்த அரசும் செய்து வருகிறது.
ஆனால், முதல்வர் கருணாநிதியின் ஆட்சிக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் இதில் தேவையில்லாமல் வீரபாண்டி ஆறுமுகத்தின் பெயரை இழுத்துவிட்டு ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.
தினமும் ஒரு பொய்யான தகவலை அளித்து வரும் ஜெயலலிதாவின் உள்நோக்கம் என்ன என்பது நாம் அனைவரும் அறிந்ததே என்று கூறியுள்ளார் செல்வராஜ்.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா












Click it and Unblock the Notifications