சென்னை புறநகர்களில் இடி, மழை:நகர் முழுவதும் கடும் அணல்
சென்னை:சென்னை நகரில் நேற்று இதுவரை இல்லாத அளவுக்கு வெயில் கொளுத்தி எடுத்தது. ஆனால் புறநகர்ப் பகுதிகளில் இடி, சூறைக் காற்றுடன் நல்ல மழை பெய்தது.
அக்னி நட்சத்திரம் உக்கிரத்தை எட்டிக் கொண்டுள்ளது. இதனால் தலைநகர் சென்னையில் கடும் வெயில் வாட்டி வருகிறது. நேற்று இதுவரை இல்லாத அளவுக்கு வெயில் தகித்தது. கிட்டத்தட்ட 107 டிகிரி வெயில் அடித்தது.
இதனால் நகரில் மக்கள் நடமாட்டம் வெகுவாகக் குறைந்து காணப்பட்டது. சாலைகளில் இரு சக்கர வாகனங்களைப் பார்ப்பது அரிதாக இருந்தது. வெயில் அதிகமாக இருந்ததால் அணல் காற்று வீசி மக்களை சித்திரவதை செய்தது.
நகரில் கடும் வெயில் நிலவிய போதிலும் புறநகர்ப் பகுதிகளில் மாலையில் நல்ல மழை பெய்தது. குறிப்பாக வண்டலூர், ஊரப்பாக்கம், பொத்தேரி, கூடுவாஞ்சேரி, காட்டாங்கொளத்தூர், மறைமலை நகர், சிங்கப்பெருமாள் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்தது.
மேலும் சூறைக்காற்றும் பலமாக வீசியதால் ஜி.எஸ்.டி. சாலையின் நடுவே நெடுஞ்சாலைத் துறையினர் வளர்த்து வந்த மரங்கள் வேரோடு சாய்ந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தின. விளம்பர பேனர்களும் இந்தக் காற்றில் சேதமடைந்தன.
-
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு












Click it and Unblock the Notifications