Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கருணாநிதியின் அரசியல் வாரிசு யார்?-சர்வேஸ்டாலின்-70%, கனிமொழி-2%, அழகிரி-2%

Subscribe to Oneindia Tamil

முதல்வர் கருணாநிதியின் அரசியல் வாரிசாக யார் வர வேண்டும் என்று நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் 70 சதவீதம் பேர் ஸ்டாலினுகு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆழகிரிக்கு வெறும் 2 சதவீதம் தான் ஆதரவு கிடைத்துள்ளது.

சன் டிவி, தினகரன் பத்திரிக்கைககளுக்காக உலகப் புகழ்பெற்ற ஏ.சி.நீல்சன் ஆய்வு மையம் தமிழக அளவில் நடத்திய கருத்துக் கணிப்பில் இந்த விவரம் தெரியவந்துள்ளது.

இதில் கருணாநிதியின் மகள் கனிமொழிக்கு 2 சதவீத ஆதரவும், கருணாநிதியின் வாரிசுகள் தவிர மற்றவர்கள் தலைவராக வர வேண்டும் என்று 20 சதவீதம் பேரும் கருத்துத் தெரிவித்துள்ளனர். மேலும் 6 சதவீதம் பேர் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.

சென்னையைப் பொறுத்தவரை அழகிரிக்கு ஒரு சதவீத ஆதரவு கூட இல்லை. அவருக்கு முட்டை தான் கிடைத்துள்ளது. கனிமொழிக்கும் 1 சதவீத ஆதரவே கிடைத்துள்ளது.

ஸ்டாலின் கோட்டை என்று திமுகவினரால் கூறப்படும் சென்னையில் ஸ்டாலினுக்கு 68 சதவீத ஆதரவு தான் உள்ளது.

ஸ்டாலினுக்கு அதிகபட்ச ஆதரவு கிடைத்திருப்பது கோவை, திருச்சி, வேலூர் பகுதிகளில் தான். இங்கு 70 சதவீதத்துக்கும் அதிகமான ஆதரவு கிடைத்துள்ளது. மதுரையில் இது 67 சதவீதமாகவும், சேலத்தில் 61 சதவீதமாகவும் உள்ளது.

மதுரையில் இருந்தபடி தென் மாவட்டங்களை ஆட்டிப் படைத்து வரும் அழகிரிக்கு மதுரையில் ஆதரவு குறைச்சலாக உள்ளதாம். ஆனால் நெல்லையில்தான் ஆதரவு அதிகமாம்.

நெல்லையில் 11 சதவீதம் பேரும், மதுரையில் 6 சதவீதம் பேரும் அழகிரியை ஆதரித்துள்ளனர். சென்னை, சேலத்தில் அவருக்கு ஒரு சதவீத ஆதரவு கூட இல்லை.

கனிமொழிக்கு மதுரையில் 5, சேலத்தில் 4 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். நெல்லையில் 3 சதவீதம் பேரும், நாகர்கோவிலில் 2 சதவீதம் பேரும் கனிமொழிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். சென்னை, வேலூர், கோவை, புதுச்சேரியில் தலா 1 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது.

ஸ்டாலின், கனிமொழி, அழகிரி தவிர மற்றவர்களின் பெயர்களை சொன்னவர்கள் 20 சதவீதம் பேர் ஆவர். அவர்கள் யார் பெயரை சொன்னார்கள் என்பதை தினகரன் வெளியிடவில்லை (ஒருவேளை தயாநிதி மாறனாக இருக்குமோ?).

அரசியல் அனுபவசாலி என்ற வகையில் ஸ்டாலினுக்கு முதலிடம் கிடைத்துள்ளதாம். ஆனால் அழகிரி, கனிமொழியை ஆதரித்தவர்கள் அதற்கான காரணமாக என்ன கூறினார்கள் என்பதை தினகரன் தெரிவிக்கவில்லை.

வென்றது புடவை-சுடிதார் நெக்ஸ்ட்:

அதே போல ஏசி நீல்சன் நடத்திய இன்னொரு கருத்துக் கணிப்பில், பெண்களுக்கு செளகரியமான உடை எது என்று கேட்கப்பட்டது.

அதற்கு புடவை என்று பெரும்பாலானவர்கள் பதில் தந்துள்ளனர்.

பெண்ண்களுக்கு புடவைதான் பெஸ்ட் என்று 69 சதவீதம் பேரும், சுடிதார்தான் தோது என்று 30 சதவீதம் பேரும், ஒரு கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை என்று ஒரு சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

பேன்ட், சட்டை, டாப்ஸ், ஸ்கர்ட் போன்றவறுக்கு ஆதரவு இல்லையாம்.

நெல்லையில்தான் புடவைக்கு நல்ல மவுசு உள்ளது. அங்கு 82 சதவீதம் பேர் புடவைக்கு ஓட்டு போட்டுள்ளனர்.

புதுச்சேரி, திருச்சியில் 80 சதவீதம் பேரும், மதுரையில், 74 சதவீதம் பேரும் புடவைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். சென்னை நகரில் 62 சதவீதம் பேருக்கு புடவைதான் பிடித்திருக்கிறதாம்.

சென்னையில் 36 சதவீதம் பேரும், தமிழக அளவில் 30 சதவீதம் பேரும் சுடிதாருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+