வங்கதேசத்தை வீழ்த்தியது இந்தியாடோணி(93), திணேஷ் கார்த்திக்(58) அபாரம்
டாக்கா:வங்கதேசத்திற்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டோணி அபாரமாக ஆடி 93 ரன்களைக் குவித்தார்.
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இன்று டாக்காவில் நடைபெற்ற முதலாவது ஒரு நாள் போட்டியில் அந்த அணியை சந்தித்தது.
![]() |
மழை காரணமாக தலா 47 ஓவர்களைக் கொண்டதாக போட்டி மாற்றப்பட்டது. டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட் செய்தது. ஆரம்பத்தில் நிதானமாக ஆடிய வங்கதேசம் பின்னர் அடித்து ஆடி விரைவாக ரன்களைக் குவித்தது.
47வது ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து வங்கதேசம் 250 ரன்களைக் குவித்தது. ஜாவேத் ஒமர் 80 ரன்களும், சகீபுல் ஹசன் 50 ரன்களும் எடுத்தனர். தமீம் இக்பால் 45 ரன்களைச் சேர்த்தார்.
இந்திய அணி தரப்பில் திணேஷ் மோங்கியா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
![]() |
பின்னர் ஆடத் தொடங்கிய இந்திய அணி ஆரம்பத்தில் நிலை தடுமாறி விளையாட ஆரம்பித்தது. விரைவாக விக்கெட்டுக்களை இழந்தாலும் டோணி மற்றும் திணேஷ் கார்த்திக் ஆகியோர் சிறப்பாக ஆடி அணியின் விக்கெட் சரிவை நிறுத்தி வெற்றிக்கு இட்டுச் சென்றனர்.
டோணி சிறப்பாக ஆடி 93 ரன்களைக் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருக்குத் துணையாக திணேஷ் கார்த்திக் ஆட்டமிழக்காமல் 58 ரன்களைக் குவித்தார்.
இறுதியில் 47 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து 253 ரன்களை சேர்த்து இந்தியா வெற்றி பெற்றது.
வங்கதேசம் இப்போட்டியில் தோற்றாலும் கூட அந்த அணியின் பந்துவீச்சும், பேட்டிங்கும் மிகச் சிறப்பாக இருந்தது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகளைக் கொண்ட தொடரில் 1-0 எனற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.
2வது மற்றும் 3வது போட்டிகள் இதே மைதானத்தில் நடைபெறவுள்ளன.
-
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி














Click it and Unblock the Notifications