ஜூன் 27ல் பதவி விலகுகிறார் டோனி பிளேர்
லண்டன்:இங்கிலாந்து பிரதமர் பதவியிலிருந்தும், தொழிலாளர் கட்சித் தலைவர் பதவியிலிருந்தும் ஜூன் 27ம் தேதியன்று விலகுவதாக பிரதமர் டோனி பிளேர் கூறியுள்ளார்.
இங்கிலாந்தில் தொழிலாளர் கட்சி ஆட்சிப் பொறுப்பில் உள்ளது. அக்கட்சியின் தலைவராக உள்ள டோனி பிளேர் பிரதமராகவும் உள்ளார்.
கடந்த பத்து வருடமாக பிளேர் பிரதமர் பதவியில் உள்ளார். சமீப காலமாக பிளேரின் செல்வாக்கு வெகுவாக குறைந்து விட்டது. ஈராக் போரில் அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட்டதால் பிளேரின் பெயர் கெட்டுப் போய் விட்டது.
இந்த நிலையில், ஜூன் 27ம் தேதி பதவி விலகுவதாக பிளேர் அறிவித்துள்ளார். நேற்று தனது தொகுதியான டிரிம்டான் நகரில் அவர் தனது கட்சியினரிடையே பேசுகையில், இந்த அறிவிப்பை வெளியிட்டார் பிளேர்.
பிளேர் கூறுகையில், பத்து வருடங்களாக பிரதமர் பதவியில் இருந்து வருகிறேன். போதும் என நினைக்கிறேன். தொடர்ந்து நான் பிரதமர் பதவியில் நீடிப்பது எனக்கும், நாட்டுக்கும் நல்லதல்ல.
1997ம் ஆண்டு நான் பிரதமர் பதவிக்கு வந்தபோது இருந்த இங்கிலாந்து இப்போது இல்லை. உலக நாடுகளுக்கு வழி காட்டும் நாடாக இங்கிலாந்து உயர்ந்துள்ளது என்றார் பிளேர்.
பிளேர் பதவி விலகுவதைத் தொடர்ந்து தற்போது நிதியமைச்சராக உள்ள கார்டன் பிரவுன் புதிய பிரதமராக தேர்வு செய்யப்படுவார். தொழிலாளர் நலக் கட்சியின் தலைவராகவும் அவர் பதவி ஏற்பார் என்று தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications