பெங்களூரில் நாய்கள் கடித்து 4 வயது சிறுவன் பலி
பெங்களூரூ:பெங்களூர் அருகே மீண்டும் நாய்கள் குதறியெடுத்ததில் 4 வயது சிறுவன் பரிதாபமாக பலியானான்.
முதல்வர் குமாரசாமியின் தொகுதிக்கு உட்பட்ட ராமநகரம் பகுதியில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
பெங்களூரில் தெரு நாய்களின் வெறிக்கு சிறுவர், சிறுமியர் பலியாவது அதிகரித்து வருகிறது. ஏற்கனவே ஒரு சிறுவனும், சிறுமியும் தெருவில் சுற்றித் திரியும் வெறி நாய்களில் சிக்கி உடல் அக்குவேறாக்கப்பட்டு பலியாயினர்.
இதையடுத்து இந்த தெரு நாய்களை ஒழித்துக் கட்ட முயற்சிகள் தொடங்கின. ஆனால், அதற்கு மிருக வதைத் தடுப்பு அமைப்பினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால், அந்தப் பணி பாதிக்கப்பட்டது.
இப்போது நாய்களைப் பிடித்துக் கொண்டு போய் ஊசி போட்டு, திரும்பவும் பிடித்த இடத்திலேேய கொண்டு வந்துவிடும் அவலம் நடக்கிறது.
இந் நிலையில் ராம்நகர் பகுதியில் மாமிச கடையின் முன் எறியப்பட்டிருந்த சில துண்டுகளுக்காக தெரு நாய்கள் சண்டை போட்டுக் கொண்டிருந்தன.
அப்போது அந்த இடத்தில் சிறுநீர் கழிக்கச் சென்ற யாசின் என்ற சிறுவனை நாய்கள் சூழ்ந்து கொண்டு கடித்து குதறின. இதில் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.
இந்த ராம்நகர் பகுதி முதல்வர் குமாரசாமியின் தொகுதிக்குட்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications