கருணாநிதி பொன்விழா செலவு-கணக்கு கேட்கும் ஜெயலலிதா
சென்னை:அதிமுக நியமிக்கும் கணக்காளர் பரிசீலனைக்கு கருணாநிதியின் பொன்விழா முழு செலவுக் கணக்கையும் உட்படுத்த வேண்டும் என அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அறிவாலயத்தில் நடத்த வேண்டிய பொன்விழாவை அரசு செலவில் நடத்தியதில் எந்த நியாமும் இல்லை.
அமைச்சர் ஆற்காடு வீராசாமி, அரசு பணம் செலவழிக்கவில்லை, கட்சிப் பணம் தான் செலவழிக்கப்படுகிறது என கூறியிருந்தார்.
ஆனால் பொன்விழாவிற்கு அச்சடிக்கப்பட்ட பிரம்மாண்ட அழைப்பிதழில் அரசு முத்திரையுடன் அச்சிடப்பட்டுள்ளன. சபாநாயகர் விழாவிற்கு அழைப்பது போல் அழைப்பிதழ்கள் அரசு செலவில் அச்சிடப்பட்டன.
சட்டசபையில் நடந்த 2 நாள் நிகழ்ச்சிக்கு வாடகை ஏதேனும் தரப்பட்டதா, சட்டசபை வாடகைக்கு விடும் நிலை வந்து விட்டதா?. இனி சட்டசபையில் எம்எல்ஏக்களின் காது குத்தல், திருமண வரவேற்பு ஆகியவற்றை நடத்திக் கொள்ளலாமா?.
இந்த விழாவிற்கு அரசு ஊழியர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு 2 நாட்களுக்கு என்ன சம்பளம் வழங்கப்பட்டது?. அரசு ஊழியர்கள் திமுகவிடம் சம்பளம் பெறலாமா?.
கருணாநிதியின் இந்த பொன் விழாவிற்கு ஆன செலவுக்குறித்து முழு கணக்கையும் வெளியிட்டு, அதிமுக நியமிக்கும் கணக்காளர் பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும். அரசுக்கு செலுத்த வேண்டிய பணத்தை உடனடியாக செலுத்த வேண்டும்.
முரசொலி மாறனுக்கு செய்த மருத்துவ செலவுக்கான ரூ.200 கோடியை உடனடியாக மத்திய அரசுக்கு அவர்களது சொந்த பணத்திலிருந்து செலுத்த வேண்டும் என கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications