கராச்சியில் பயங்கர வன்முறைதுப்பாக்கிச் சூட்டில் 30 பேர் பலி
கராச்சி:பாகிஸ்தானின் கராச்சி நகரில் நேற்று அதிபர் முஷாரப்பின் ஆதரவாளர்களுக்கும், பதவி நீக்கம் செய்யப்பட்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இப்திகார் செளத்ரியின் ஆதரவாளர்களுக்கும் இடையே நடந்த பயங்கர துப்பாக்கிச் சண்டையில், 30 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தான் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவியிலிருந்து இப்திகார் செளத்ரி பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அங்கு நீதித்துறையினர் கடும் கொந்தளிப்படைந்துள்ளனர்.
இந்த நிலையில், கராச்சியில், செளத்ரி ஆதரவாளர்களும், அதிபர் முஷாரப்பின் ஆதரவாளர்களும் தனித் தனியாக பேரணிகளை நடத்தினர். இதனால் அங்கு நேற்று காலை முதலே பரபரப்பு நிலவியது.
இந்த நிலையில், இரு தரப்பு ஆதரவாளர்களும் திடீரென துப்பாக்கிச் சூட்டில் இறங்கினர். இரு தரப்பினரும் சரமாரியாக துப்பாக்கிகளால் சுட்டுக் கொண்டனர்.
செளத்ரி ஆதரவாளர்கள் நடத்திய பேரணியில், திடீரென முஷாரப்புக்கு ஆதரவாக செயல்படும் ஒரு பிரிவினர் புகுந்து சரமாரியாக துப்பாக்கிகளால் சுட்டனர். பதிலுக்கு செளத்ரி ஆதரவாளர்களும் துப்பாக்கிளால் சுட அந்தப் பகுதியே போர்க்களம் போல மாறியது.
தாறுமாறாக இரு தரப்பினரும் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டதில் 30 பேர் பரிதாபமாக இறந்தனர். 150க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அந்தப் பகுதி முழுவதும் ரத்தம் சிதறி பயங்கரமாக காட்சி அளித்தது. பல வாகனங்களுக்கும் தீவைக்கப்பட்டது.
முன்னதாக பேரணியில் கலந்து கொள்வதற்காக செளத்ரி கராச்சி வந்தார். விமான நிலையத்திற்கு அவர் வந்தபோது கலவரம் நடந்து கொண்டிருந்ததால் அவரால் விமான நிலையத்தை விட்டு வெளியே வர முடியவில்லை.
வெளியில் செல்வது ஆபத்தானது என்று போலீஸார் எச்சரித்ததால் அவர் விமான நிலையத்திலேயே தங்கியிருந்தார். பின்னர் அங்கிருந்து இஸ்லாமாபாத் திரும்பிச் சென்றார்.
கராச்சி வன்முறையால் பாகிஸ்தான் முழுவதும் பரபரப்பாக உள்ளது. நிலைமையை சமாளிப்பது குறித்து அதிபர் முஷாரப், பிரதமர் செளகத் அஜீஸ் மற்றும் அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.
-
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்!












Click it and Unblock the Notifications