ஜனாதிபதி பதவி- சுஷில் குமார் ஷிண்டேவைநிறுத்த காங் கூட்டணி-இடதுசாரிகள் முடிவு?
டெல்லி:ஜனாதிபதி தேர்தலில் மூத்த காங்கிரஸ் தலைவர் சுஷில் குமார் ஷிண்டேவை நிறுத்த காங்கிரஸ் கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சியும் முடிவெடுத்துள்ளன.
அப்துல் கலாமையே மீண்டும் ஜனாதிபதியாக்க காங்கிரஸ் விரும்பவில்லை. இதனால் வேறு ஒருவரை அடையாளம் காணும் பணியில் அந்தக் கட்சி தீவிரமாகியுள்ளது.
![]() |
இது தொடர்பாக இடதுசாரிகள் மற்றும் கூட்டணிக் கட்சிகளுடன் காங்கிரஸ் தலைவர் சோனியா ஆலோசனை நடத்தி வருகிறார்.
ஜனாதிபதி பதவிக்கு சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜியை நிறுத்த இடதுசாரிகள் விரும்பின. ஆனால், இதற்கு காங்கிரஸ் ஆதரவு தரவில்லை.
இந் நிலையில் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, மின்துறை அைமச்சர் சுஷில்குமார் ஷிண்டே, முன்னாள் மத்திய அமைச்சர் கரண் சிங் ஆகியோரது பெயர்கள் அடிபட்டன.
இதில் முகர்ஜியை உச்சத்தில் அமர வைக்க காங்கிரஸ் விரும்பவில்லை. அதே போல பாஜக ஆட்சியின்போது அவர்களுடன் நட்பு பாராட்டிய கரண் சிங்கையும் காங்கிரஸ் ஜனாதிபதியாக்க விரும்பவில்லை.
அதே நேரத்தில் சோனியா ஆதரவாளரும், ராஜிவ் குடும்பத்துக்கு நெருக்கமானவரும், முன்னாள் மகாராஷ்டிர முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ஷிண்டேவை ஜனாதிபதியாக்க சோனியா தீவிரம் காட்டி வருகிறார்.
ஷிண்டே மூத்த தலித் தலைவர் என்பதும் அவருக்கு சாதகமான அம்சமாகும். அவரை மாயாவதியும் ஆதரிக்கக் கூடும் எனத் தெரிகிறது.
மேலும் இடதுசாரிக் கட்சிகளும், திமுக, லாலு பிரசாத் யாதவ், ராம்விலாஸ் பாஸ்வான், பாமக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளும் தலைவர்களும் தலித் தலைவரான ஷிண்டேவுக்கு ஆதரவு தர மகிழ்ச்சியுடன் முன் வந்துள்ளதாகத் தெரிகிறது.
இது தொடர்பாக நேற்று சோனியா காந்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுசெயலாளர் பரதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைவர் சீதாராம் யெச்சூரி, பார்வார்டு பிளாக் கட்சி பொதுசெயலாளர் விஸ்வாஸ் ஆகியோர் சந்தித்து பேசினார்.
அப்போது ஷிண்டேவுக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.
காங்கிரஸ்காரராக இருந்தாலும் கவர்னர் பதவியில் இருந்தபோது நடுநிலையோடு நடந்து காட்டியவர் ஷிண்டே.
தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஷிண்டேவை நிறுத்தினால் அவரை பாஜகவும் எதிர்க்க முடியாத சூழலுக்குத் தள்ளப்படலாம் என காங்கிரஸ் கணக்கு போடுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!













Click it and Unblock the Notifications