கர்நாடகத்துக்கு ஏற்பட்ட பாதிப்பை களையகருணாநிதி முயல வேண்டும்-குமாரசாமி
பெங்களுரூ:காவிரி நதி நீர் பங்கீடு பிரச்சனையில் நடுவர் மன்றம் அளித்த இறுதி தீர்ப்பில் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தால் நான் தலையிட்டு தீர்வு காண முயற்சிக்கிறேன். அதேபோல கர்நாடகாவிற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து தமிழக முதல்வர் கருணாநிதி தலையிட்டு தீர்வு காண முன் வர வேண்டும் என கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது,
காவிரி நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பு கர்நாடகத்திற்கும், விவசாயிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தீர்வு காண அரசு எல்லா நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
நாட்டில் உள்ள அரசியல் தலைவர்களில் தமிழக முதல்வர் கருணாநிதி மிகவும் அனுபவமிக்கவர். தமிழக சட்டசபையில் தொடர்ந்து 50 ஆண்டுகள் உறுப்பினராகப் பணியாற்றியதற்காக பொன்விழாவையும் கொண்டாடியுள்ளார்.
காவரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு தமிழகத்திற்கு பாதகமாக உள்ளது என அவர் கருத்து தெரிவித்து இருப்பது வியப்பை அளிக்கிறது.
கருணாநிதி கூறுவதைப் போல காவிரி பிரச்சனையில் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தால் நான் தலையீட்டு தீர்வு காண உதவ தயாராக இருக்கிறேன். கர்நாடகாவுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கருணாநிதி தலையிட்டு தீர்வு காண முயற்சிக்க வேண்டும்.
அவர் தலைமையில் மேற்கொள்ளும் இத்தீர்வு முயற்சிக்கு நான் அனைத்து வகையிலும் உதவ தயாராக இருக்கிறேன். காவிரி பிரச்சனையில் பிரதமர் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம்.
நடுவர் மன்ற தீர்ப்பை எதிர்த்து கன்னட அமைப்புகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். போராட்டம் நடத்துபவர்கள் இப்பிரச்சனைக்கு தீர்வு காணும் வரை கர்நாடகாவில் தமிழ் திரைப்படங்களை திரையிடக் கூடாது என கோரிக்கை வைத்துள்ளனர். இது சட்டப்படி தவறு.
இருப்பினும் கோரிக்கையை தடுக்க முயற்சித்தால், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால் எந்த கருத்தையும் சொல்ல நான் விரும்பவில்லை என அவர் கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications